Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வுக்கான வினாக்கள் மற்றும் விடைகள்

 


சுருக்கமாக விடையளி

1. குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயாேதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாகக் கருதக்கூடாது?

  • 15 வயதுக்குத் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.
  • 60 வயதைக் கடந்தவர்கள் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல என்பதால் இவர்கள் உடல் உழைப்பைச் செய்ய முடியாது.
  • எனவே அவர்களை பணிக்குழுக்களாக கருதக்கூடாது.

 

2. எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனிதவளம் கருதப்படுவது ஏன்?

  • எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதவளம் அவசியமாகும்.
  • நாட்டின் பிற வளங்களை உற்பத்தி வளங்களாக மாற்ற கூடிய திறமை மனித வளத்திடம் மட்டுமே உள்ளது.
  • மனிதனின் உடல் திறன், சுகாதார திறன்கள், கல்வி, உடல்நலன், அதிக வருமானத்திற்கான முதலீடு அனைத்தும் மனித வளத்தில் அடங்கும்.

 

3. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க

  1. PPP =  வாங்கும் திறன் சமநிலை
  2. HDI =  மனித வள மேம்பாட்டு குறியீடு

 

4. மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.

மக்களாட்சி அரசாங்க அமைப்பு முறை இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. அவை

  • நாடாளுமன்ற அரசாங்க முறை

இந்தியா, இங்கிலாந்து

  • அதிபர் அரசாங்க முறை

அமெரிக்கா, பிரான்சு

 

5. இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப்பற்றி விவரி

  • இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகின்றது.
  • தேர்தல் ஆணையம் தலைமை ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
  • தேர்தல் ஆணையம் நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை பாராளுமன்றத்திற்கம், சட்டசபைகளுக்கும் நடத்துகிறது.

 

6. வரையறு, அ) மொரைன் ஆ) டிரம்ளின் இ) எஸ்கர்

அ) மொரைன்

  • பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு  உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன் எனப்படும்.
  • படுகை மொரைன், விளிம்பு மொரைன் மற்றும் பக்க மொரைன் என வகைப்படுத்தப்படும்

ஆ) டிரம்ளின்

  • கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைனகள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்

  • பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள் சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது.
  • இவ்வோறு படிய வைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.

 

7. புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

  • புவி அதிர்ச்சி, அதிர்வலைகளை உருவாக்குகின்றன.
  • தான் ஊடுருவிச் செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

இதன் வகைகள்

  1. முதன்மை அலைகள்
  2. இரண்டாம் நிலை அலைகள்
  3. மேற்பரப்பு அலைகள்

 

8. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.

நேரடி மக்களாட்சி மறைமுக மக்களாட்சி
1 பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய  அரசு முறை நேரடி மக்களாட்சி எனப்படுகிறது. பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைக்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசு முறை மறைமுக மக்களாட்சி எனப்படுகிறது
2 எ.கா: பண்டைய கிரேக்க அரசுகள்
சுவிட்சர்லாந்து
எ.கா: இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 

 

9. சிறு குறிப்பு வரைக

அ) வியாபரக்காற்றுகள்

  • வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த  மண்டலங்களை நோக்கி வீசும் காற்று வியாபாரக்காற்று எனப்படும்.
  • இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.

ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்

  • மேலைக் காற்றுகள் வட, தென் அரைக் கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
  • இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காகவும் வீசுகின்றன.
  • மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக் கூடியவை 40C அட்சத்தில் வீசும் இக்காற்றுகள் “கர்ஜிக்கும் நாற்பதுகள்” என அழைக்கப்படுகிறது.

 

10. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

  1. டோல்மென் எனப்படும் கற்திட்டை
  2. சிஸ்ட் எனப்படும் கல்லறை
  3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்
  4. தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்
  5. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்

11. எகிப்தியர்கள் கலை கட்டக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக

  • எகிப்தியர்கள் கட்டக்கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்புறிருந்தன.
  • அவர்களது எழுத்து முறை கூடச் சித்திர வடிவில் இருந்தது.
  • பரோக்களின் சமாதிகளான பிரமிடுகள் இன்றும் பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்களாக உள்ளன.
  • கெய்ரோவிற்கு அருகில் உள்ள கிஸா பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • ஸ்பிங்ஸின் சிங்க உடலும் மனிதமுகமும் கொண்ட சிற்பங்களில் ஒன்றாகும்

 

12. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களை கூறு.

  • யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்க, ரோமானிய மேற்கு ஆசிய வணிகர்கள் பழங்கால தமிழகத்துடன் வணிகத்தொடர்பு வைத்துள்ளனர்.
  • மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
  • செங்கடல் துறைமுகங்களான பெர்னிகே, குசேர் அல் காதிம் போன்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • தாய்லாந்து நாட்டில் குவான்லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது.

13. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக

தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

  • கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தன.
  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளும் வந்தன.
  • மிளகு போன்ற நறுமணப் பொருள்களும், யானைத்தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருள்களும் ஏற்றுமதமி ஆயின.
  • தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
  • இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகைத் துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
  • தென் கிழக்கு ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றனர்.

 

வேறுபடுத்துக

1. கருவம் மற்றும் மேலோடு

மேலோடு கருவம்
1. நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவி மேலோடு என்கிறோம். புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது.
2. புவிமேலோடு திடமாகவும் இறுக்கமாவும் உள்ளது. இது உட்கருவம் திட நிலையிலும், வெளிக் கருவம் திரவ நிலையிலும் உள்ளது.
3. புவி மேலோட்டில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் என அழைக்கப்படுகிறது. கருவத்தில் நிக்கலும், இரும்பும் அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு “நைப்” என அழைக்கப்படுகிறது.
 

2. முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள்

முதன்மை அலைகள் இரண்டாம் நிலை அலைகள்
1. முதன்மை அலைகள்  மற்ற அலைகளை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடியவை முதன்மை அலைகளை விட இரண்டாம்நிலை அலைகளின் வேகம் குறைவு
2. இவ்வலைகள் திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாக பயணிக்கும். இவ்வலைகள் திடப்பொருள் வழியாக மட்டுமே பயணிக்க கூடியவை.
3. இதன் சராசரி வேகம் வினாடிக்கு 5.6 கிலோமீட்டர் முதல் 10.6 கிலோமீட்டர் வரையாகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் முதல் 8 கிலோமீட்டர் வரையாகும்.

 3.வானிலை மற்றும் காலநிலை

வானிலை காலநிலை
1. ஒரே நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்ல மாற்றத்தைப் பற்றி அறிவது வானிலை ஆகும் நீண்ட காலத்திற்கு மிகப் பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலை ஆகும்
2. ஓவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியதாக உள்ளது. ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது.
3. வானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும்.காலநிலையைப் பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும்.

 


விரிவாக விடையளி

1. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?

வேளாண்மைத் தொழில்

சங்க காலத்தில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. நன்செய் நிலத்தில் நெல்லும், புன்செய் நிலத்தில் தானியங்களும் பயிரிடப்பட்டது.

கால்நடை வளர்ப்பு

பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்த்தார்கள்.

கைவினை மற்றும் தொழிற் கூடங்கள்

  • மட்கலங்கள் செய்தல், கல்லினால் ஆன அணிகலன்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், முத்துக்குளித்தல், சங்கு வளையல்கள், துணி நெசவு போன்ற பல துறைகளில் சங்ககால மக்கள் திறன் பெற்றிருந்தனர்.
  • மட்கலங்கள் கரிய நிறத்தவை. செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை. கருப்பு – சிவப்பு நிறத்தவை என பலவிதமாக தயாரிக்ப்பட்டன.
  • இரும்பால் உழகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக் கருவிகளுகம் தயாரிக்கப்பட்டன.
  • செல்வந்தர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற  உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அணிந்தனர்.
  • கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன.

2. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தை பொறுத்து அதன் வகைகளை விவரி.

எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தை பொறுத்து மூன்று வகைப்படும்

  1. சீறும் எரிமலை
  2. உறங்கும் எரிமலை
  3. செயலிழந்த எரிமலை

சீறும் எரிமலை

நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழப்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படும்

  • உதாரணம் ; செயிண்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்

உறங்கும் எரிமலை

நீண்ட காலமாக எரிமலைக் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலை எனப்படும். இவை திடீரென வெடிக்கும் தன்மையுடையது

  • உதாரணம் ; ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

செயலிழந்த எரிமலை

எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் செயலிழந்த எரிமலைகள் எனப்படும்

  • உதாரணம் ; கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா

 

3. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?

இந்தியாவில் மக்களாட்சி உள்ள முக்கிய சவால்கள்

  • கல்வியறிவின்மை
  • வறுமை
  • பாலினப் பாகுபாடு
  • பிராந்தியவாதம்
  • சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
  • ஊழல்
  • அரசியல் குற்றமயமோதல்
  • அரசியல் வன்முறை

4. இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்

  • இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைக் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கி கொண்டு வந்துள்ளது.காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் விதமாக சுற்றுசூழல் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A(g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரிகள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும் மேம்படுத்துவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளன என்று வலியுறுத்துகிறது.
  • மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை, சம வாய்ப்பு ஆகியவற்றைக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதே இந்தியாவின் சுற்று சூழல் கொள்கையாகும்.

 

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்