சுருக்கமாக விடையளிக்கவும்
1. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
- முசோலின் – இத்தாலி
- ஹிட்லர் – ஜெர்மனி
- பிராங்கோ – ஸ்பெயின்
2. முத்து துறைமுக நிகழ்வை விவரி
- 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும்தாக்குதலைத் தொடுத்தன.
- அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
- இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
- இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.
3. சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானேடயின் பங்களிப்பினைக் குறிப்பிடுக
- நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர். இவ்விருவரும் சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்.
- விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
4. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
- இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
- 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
5. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
- உடன்கட்டை ஏறுதல் (சதி)
- குழந்தைத் திருமணம்
- பலதார மணம்
- விதவைப்பெண்கள் மறுமணம்
6. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
- வரிவசூலித்தல்
- நிலப்பகுதிகளை நிர்வகித்தல்
- வழக்குகளை விசாரித்தல்
- சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்
- காவல் காத்தல் (படிக்காவல் என்றும் அரசுக்காவல்)
- நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுதல்
7. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
- நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
- மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
- மேலும் அவருக்கு கர்நாடகப் பகுதியிலிருந்த குதிரைப் படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் இருந்தது.
- மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
- களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
8. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
- மருது சகோதரர்கள் ஜூன் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ என்றழைக்கப்படுகிறது.
- பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
- இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
- ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
- சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார்.
- வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
- புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
- ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
9. ’மண்’ – வரையறு
- மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
- பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
- மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.
10. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
உருவாக்கம்:
தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
வேதியியல் பண்புகள்:
கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்:
ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
வளரும் பயிர்கள்
பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு
11. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.- காரிஃப் பருவம் – ஜூன்-செப்டம்பர்
- ராபி பருவம் – அக்டோபர்-மார்ச்
- சையத் பருவம் – ஏப்ரல்-ஜூன்
12. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
- தன்னிறைவு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை
- தீவிர வேளாண்மை
- வறண்ட நில வேளாண்மை
- கலப்பு வேளாண்மை
- படிக்கட்டு முறை வேளாண்மை
13. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக
- இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது.
- காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப்படிம எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும்.
இதன் வகைகள்
- புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
- புதுப்பிக்க இயலா வளங்கள்
14. மெக்னீசியத்தின பயன்களை குறிப்பிடுக
- உருகிய இரும்புக் குழப்போடு மக்னீசியத்தை சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு பட்டறைப் பயன்பழடு மேலும் சிறப்பாகிறது.
- மக்னீசியம் அணு உலைகளின் உட்சுவர்களை கட்டமைக்கப் பயன்படுகிறது.
- தூய சிலகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்ஸைடுகளிலிருந்தும் பிரித்தெடுக்கு மெக்னீசியம் உதவுகிறது.
15. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும்
விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம்
உண்டாக்கக் கூடிய
ஒரு வாயு.
- இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
- இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும், மின் உற்பத்திக்கும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் விளங்குகிறது.
16. பஞ்சீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக
- ஒவ்வொரு நாட்டின் எல்லையும், இறையாண்மையும் மதித்தல்
- பரஸ்பர ஆக்கரமிப்பின்மை
- உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
- அமைதியாக சேர்ந்திருத்தல்
17. சார்க் உறுப்பு நாடுகளை பட்டியலிடுக
இந்தியா | பூடான் | நேபாளம் |
மாலத்தீவு | பாகிஸ்தான் | இலங்கை |
ஆப்கானிஸ்தான் | வங்காளதேசம் |
18. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
19. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிமன்றத்தின் அதிகாரங்கள் யாவை?
- சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
- அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
- முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
- மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் `2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
20.அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
- இந்தியா – ஜவகர்லால் நேரு
- யுகோஸ்லாவியா – டிட்டோ
- எகிப்து – நாசர்
- இந்தோனேசியா – சுகர்னோ
- கானா – குவாமே நிக்ரூமா
21. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
- உணவு தானிய உற்பத்தியல் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
- உயர் ரக விதைகளான அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.
- முக்கிய தானிய பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது.
22. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
- ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
- பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services).
- பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
- மதிய உணவுத் திட்டம்.
23. உலகமயமாக்கல் என்றால் என்ன?
உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
24. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
- மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
- வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
- உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
விரிவாக விடையளிக்கவும்
1. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
- சமூகத்தில் நிலவி வந்த சதி எனும் உடன்கட்டை ஏறுதல்
- குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள்
- விதவைப் பெணகள் மறுமணம் செய்ய உரிமை மறுக்கப்பட்டது.
- பெண் அடிமைத்தனம், ஆணை விட பெண் கீழானவர் எனும் நடைமுறைகள்
- வரதட்சணைகள்
- பெண் கல்வி மறுப்பு நடைமுறைகள்
- எல்லையற்ற உபநிடதங்கள், போதனைகள்
- பிராமணர் மேலாதிக்கம் செய்யும் சடங்கு
- மூட நம்பிக்கைகள், பழக்க வழங்கங்களின் அதிக தாக்கங்கள்
- பயங்கரமான சாதிக் கொடுமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள்
- மேலை நாட்டு பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்க மறுத்தது
2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க
இராமகிருஷ்ண பரமஹம்சர்
- கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர்
- புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
- அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும்.
- மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
சுவாமி விவேகானந்தர்
- நடைமுறை வேதாந்தமான மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
- பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்
- இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
- இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக்
கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
- விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
- வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.
3. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:-
இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பலமாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
அணு ஆயுதப் பரவல்:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.
பன்னாட்டு முகமைகள்:-
பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
காலனி நீக்கச் செயல்பாடு:-
காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.
4. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக
இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோகக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பக்ரா நங்கல் அணை
- சடெலஜ் ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று
- பக்ராநங்கல் அணை உலகின் மிக உயர்ந்த அணைகளில் ஒன்று
- 10,000 மில்லியனுக்கு அதிகமான தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது
- பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் பகுதிகள் பயனடைகின்றன.
ஹிராகுட் திட்டம்
- மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று.
- இது உலகின் மிக நீளமான அணை
அதன் நோக்கங்கள்
- நீரின் விரவான ஓட்டத்திலிருந்து ஏராளமான நீர் மின் சக்தியை பயன்படுத்துதல்.
- வெள்ளம் மற்றும் அதன விளைவாக எற்படும் அழிவைக் கட்டுப்படுத்ததல்.
- பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களுக்கு கால்வாய் வழியாக நீர்பாசனம்
- நீர் போக்குவரத்தை மேம்படுத்துதல்
- வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி
- நிலையான மற்றும் உறுதியான மின்சாம் மூலம் விரைவான தொழில்மயமாக்கல்
5. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
தீவிர வேளாண்மை
- தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகும்.
- சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்
தோட்ட வேளாண்மை
- தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
- இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.
- தேயிலை, காபி, இரப்பர், மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.
6. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
அமைச்சரவை தொடர்பானவை
- முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
- அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
- அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
- அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
- மாநில அரசு வழக்குரைஞர்
- மாநில தேர்தல் ஆணையர்
- அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை
- சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
- சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
- சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
- எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
7. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
- மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
- சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
- நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
- முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
- மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
- மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
- ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
- அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
- ஆண்டு வரவு-செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
8. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
- சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
- விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்டதொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை.
- பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L. 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
- அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது.
- இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
- இவ்வாறு, பசுமைப்புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.
9. பொது விநியோக முறையை விவரிக்கவும்.
பொது வழங்கல் முறை (Public Distribution System) தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறை”யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது.
இலக்கு பொது வழங்கல் முறை
- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் “இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted PDS) செயல்பாட்டில் இருந்தது. உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
- ஆனால், இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது,
மானியம்
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
- மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
- தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
- இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன. இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
- மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு `3 என்ற விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு `2 என்ற விகிதத்திலும், திணை கிலோவிற்கு `1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
10. வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
1. அதிக மக்கள் தொகை
- இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்
1000க்கு 1.7 ஆக உள்ளது.
- அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.
- எனவே சாதாரண விலை நிலை அதிகமாக இருக்கும். எனவே இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
2. அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருள்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
3. பொருள்களுக்கான தேவை
- பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
4. பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது
- விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.
5. பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு
- பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருள்களின் விலை அதிகரிக்கிறது. ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
6. வறுமை மற்றும் சமத்துவமின்மை
- இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றதாழ்வு உள்ளது.
- 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத்துக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
- வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
11. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
நகரமயமாக்களின் தாக்கங்கள்
- நகரமயமாக்கலும் மக்கள் தொகை அடர்த்தியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
- நகர்புறமயமாக்கலின் விரைவான வளர்ச்சியான சமூக-பொருளாதார அபிவிருத்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.
- இந்தியா போனற் வளரும் நாடுகளின் நகரமாயமாக்கம் விரைவாக அதிகரித்து வருகிறது
- கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
- மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படுகின்றன.
- 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்புற மக்கள் தொகை 377 மில்லியன்களைக் கடந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
- 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்றிகும் அதிகமான மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:
- நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
- நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
- குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
- போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
- குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
- வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
- திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்கிறது.
- குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.
12. வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
- வேலூர் புரட்சிக்கு முன்பாகவே 1792இல் திப்புவோடு ஏற்பட்ட மோதலுக்கு பின்பு சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
- மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தார்கள் போன்றோர் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டதே 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.
- பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பதவி உயர்வும் குறைவாக இருந்தது.
- சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் குறைவான மதிப்பளித்தனர். அவர்களுத வேளாண் கொள்கை சிக்கலாக இருந்தது.
- நிலக்குத்தகை முறையின் நிலையற்ற தன்மை, 1805-ம் ஆண்டு கடும் பஞ்சம், நெருக்கடி போன்றவைகள், பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய அறிவுரைகள்
- புதிய ரக துப்பாக்கிகளில் தடவப்பட்ட விலங்குகள் கொழுப்பு மற்றும் தோல் உறைகள்.
- இவ்வாறு எதிரப்பு தெரிவித்த அனைத்தையுமே கம்பெனி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது.
- 1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்த புரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த கர்னல் கில்லஸ்பியின் கொடுங்கோன்மை
- இவ்வாறு பல கூறுகள் 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
0 கருத்துகள்