1.முத்து துறைமுக நிகழ்வை விவரி
- 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும்தாக்குதலைத் தொடுத்தன.
- அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
- இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
- இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.
2. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
- முசோலின் – இத்தாலி
- ஹிட்லர் – ஜெர்மனி
- பிராங்கோ – ஸ்பெயின்
3. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
- உடன்கட்டை ஏறுதல் (சதி)
- குழந்தைத் திருமணம்
- பலதார மணம்
- விதவைப்பெண்கள் மறுமணம்
4. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
- வரிவசூலித்தல்
- நிலப்பகுதிகளை நிர்வகித்தல்
- வழக்குகளை விசாரித்தல்
- சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்
- காவல் காத்தல் (படிக்காவல் என்றும் அரசுக்காவல்)
- நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுதல்
5. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
- நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
- மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
- மேலும் அவருக்கு கர்நாடகப் பகுதியிலிருந்த குதிரைப் படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் இருந்தது.
- மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
- களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
6. ’மண்’ – வரையறு
- மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
- பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
- மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.
7. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
- தன்னிறைவு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை
- தீவிர வேளாண்மை
- வறண்ட நில வேளாண்மை
- கலப்பு வேளாண்மை
- படிக்கட்டு முறை வேளாண்மை
8. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
உருவாக்கம்:
தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
வேதியியல் பண்புகள்:
கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்:
ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
வளரும் பயிர்கள்
பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு
9. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
10. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
- வெளியுறவுக்கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு தரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.
- இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க முயல்கிறது.
11. பஞ்சீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக
- ஒவ்வொரு நாட்டின் எல்லையும், இறையாண்மையும் மதித்தல்
- பரஸ்பர ஆக்கரமிப்பின்மை
- உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
- அமைதியாக சேர்ந்திருத்தல்
12. அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
- இந்தியா – ஜவகர்லால் நேரு
- யுகோஸ்லாவியா – டிட்டோ
- எகிப்து – நாசர்
- இந்தோனேசியா – சுகர்னோ
- கானா – குவாமே நிக்ரூமா
13. உலகமயமாக்கல் என்றால் என்ன?
உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
14. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
- ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
- பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services).
- பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
- மதிய உணவுத் திட்டம்
15. FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”
0 கருத்துகள்