SSlC முதல் திருப்புதல் பொதுத்தேர்வு
2022
பகுதி -1
1) இ) கிளமென்சோ
2) ஆ) பதுங்கு குழி போர் முறை
3) அ)1925
4) இ)1929 அக்டோபர் 24
5) ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
6) இ) (1)-(ii),(2)-(iii),(3)-(IV),4-(I)
7) இ) பாங்கர்
8) அ)பாமீர் முடிச்சு
9) இ) பஞ்சாப்
10) இ) அயனமண்டல பருவக்காற்று காலநிலை
11) இ) சட்டப்பிரிவு 360
12)அ) குடியரசு தலைவர்
13) அ) வேளாண்மை
14) அ) தலா வருமானம் (PCI)
பகுதி II
15)ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
- இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று.
- பிரான்சின் – அதி தீவிரப்பற்று
- ஜெர்மெனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று.
16)சீன ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
- சீன-ஜப்பானிய போரில் (1894-1895) சீனாவை சிறய நாடான ஜப்பான் தோற்கடித்தது.
- ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது
- இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்பித்தது.
- துருக்கி மீண்டும் ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
- கமால் பாட்சா துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றி அமைத்தார்.
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும், உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
எ.கா.
வேளாண் உற்பத்தி பொருள்களின் விலை பாதியாக குறைந்தது
19) ”வெப்ப குறைவு விகிதம்” எனறால் என்ன?
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு ”வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
20) இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்பு பிரிவுகள் யாவை
வடக்கு மலைகள்
வடபெரும் சமவெளிகள்
தீபகற்ப பீடபூமி
கடற்கரை சமவெளி
தீவுகள்
21)இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
- இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
- இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.
- இலட்சத்தீவுக்கூட்டங்களை 8° கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.
- இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு (Pitt Island) பறவைகள்
சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.
- இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் 1973ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது
- மேற்கு கடற்கரை
- அசாம்
- மேகாலயாவின் தென்பகுதி
- திரிபுரா
- நாகலாந்து
- அருணாச்சலப்பிரதேசம்
போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
- மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
- தொடர்ச்சியான மலைகள்
- இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
- கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
- கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
- தொடர்ச்சியற்ற மலைகள்
- இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.
- நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
நீதிப்பேராணை வகைகள்
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)
- கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
- தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
- ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
- தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
- ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
- அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
- குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X – M) + NFIA
27)மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு
- மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
- உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது .
டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்
இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு
- போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும். எனவும் மைய நாடுகள் அனைத்தும் போர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் வலியுறுத்தப்பட்டன.
- ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
- ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது.
- ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.
- ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
- அல்சேஸ்-லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
- முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
- வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
- போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
- நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின்கீழ் ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
- தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
- இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
- வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
- இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
- பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
- வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
- மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் ஒப்பீடு | பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் |
கருத்து | பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து | பொருளாதார முன்னேற்றம் ஒரு “பரந்த கருத்து” |
வரையறை / பொருள் | ஒரு குறிப்பிட்டகாலத்தில் பொருளாதாரத்தில் வெளியீட்டின் நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும். | இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, HDIயின் குறியீட்டின் முன்னேற்றம் வாழ்க்கைக் தரத்தில் உயர்வு, தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் குறிக்கிறது. |
அணுகுமுறை இயல்பு | அளவின் இயல்பு | தரத்தின் இயல்பு |
நோக்கம் | GDP, GNP, FDI, FII, போன்ற அளவுகள் அதிகரிக்கும் | வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம். |
கால வரம்பு | இயற்கையில் குறுகிய காலத்தை உடையது | இயற்கையில் நீண்ட காலத்தை உடையது |
பொருந்தும் தன்மை | வளர்ந்த நாடுகள் | வளர்ந்து வருகின்ற நாடுகள் |
அளவீட்டு நுட்பங்கள் | நாட்டு வருமானத்தை அதிகரித்தல் | உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல் அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை |
நிகழ்வின் அதிர்வெண் | ஒரு குறிப்பிட்ட காலம் | தொடர்ச்சியான செயல்முறை |
அரசாங்க உதவி | இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி/ ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது | அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை |
காலம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் செப்டம்பர் வரையாகும்.
பருவக்காற்று துவக்கம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல்அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46oC வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)’பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது.
- இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.
- அவை
- அரபிக்கடல் கிளை
- வங்காள விரிகுடா கிளை
அரபிக்கடல் கிளை
- தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
- இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
- ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
வங்காள விரிகுடா கிளை
- வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
- இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது.
- பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
- இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
- இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
சட்டமன்ற அதிகாரங்கள்
- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
- மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
- குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
- அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
- குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
- நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம். மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
- கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.
- மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நீதி அதிகாரங்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
GDPஐ கணக்கிடும் முறைகள் | ||
செலவின முறை | வருமான முறை | மதிப்பு கூட்டு முறை |
1. செலவின முறை
- இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.
Y = C + I +G + (X – M)
2. வருமான முறை
- பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது
வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.
3. மதிப்பு கூட்டு முறை
- மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
- உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது .
டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்
இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு
40) இந்திய தீவுகள் பற்றி குறிப்பிட்டு விவரிக்கும்?
41) காலக் கோடு
1912- முதல் பால்கன் போர்
1914- முதல் உலகப்போர் தொடக்கம்
1919- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920- பன்னாட்டு சங்கம் தோற்றம்
1939- இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
42)உலக வரைபடம்
பகுதி - IV
43)அ) குறிப்பு வரைக
மார்ன் போர் மற்றும் வெர்டன் போர்
பாரிஸ் அமைதி மாநாடு
ஆ) முதல் உலகப்போரின் விளைவுகள் யாவை?
0 கருத்துகள்