Ad Code

Ticker

6/recent/ticker-posts

school book back qustion answer|9 std social|பாறைக்கோளம்-I புவி அகச்செயல்முறைகள்

பாறைக்கோளம்-I புவி அகச்செயல்முறைகள்


 

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க. 

1. புவியின் திடமான தன்மை கொண்ட மேற்புற அடுக்கை _______________ என்று அழைக்கின்றோம்

  1. கருவம்
  2. கவசம்
  3. புவிமேலோடு
  4. உட்கரு

விடை : புவிமேலோடு

2. புவியினுள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை _______________ என்று அழைக்கிறோம்

  1. கருவம்
  2. வெளிக்கரு
  3. கவசம்
  4. மேலோடு

விடை : வெளிக்கரு

3. பாறைக்குழம்பு  _________________ காணப்படுகிறது

  1. புவிமேலாடு
  2. கவசம்
  3. கருவம்
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : கவசம்

 

4. டையஸ்ட்ரோபிசம் ______________ உடன் தொடர்படையது.

  1. எரிமலைகள்
  2. புவிஅதிரச்சி
  3. புவித்ததட்டு நகர்வு
  4. மடிப்புகள் மற்றும் பிளவுகள்

விடை : மடிப்புகள் மற்றும் பிளவுகள்

5. புவிதட்டுகளின் நகர்வு _________________ ஆற்றலை வெளிப்படுத்துகிறது

  1. நீர் ஆற்றல்
  2. வெப்ப ஆற்றல்
  3. அலையாற்றல்
  4. ஓத ஆற்றல்

விடை : வெப்ப ஆற்றல்

6. ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _________________ நோக்கி நகர்ந்தது.

  1. வடக்கு
  2. தெற்கு
  3. கிழக்கு
  4. மேற்கு

விடை : வடக்கு

7. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா _________________ கண்டத்தின் ஒரு பகுதியா இருந்தது.

  1. கோண்டுவானா
  2. லொரேசியா
  3. பாந்தலாசா
  4. பாஞ்சியா

விடை : கோண்டுவானா

8. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _________________ எனப்படும். பிளவு

  1. மடிப்பு
  2. பிளவு
  3. மலை
  4. புவி அதிர்வு

விடை : பிளவு

9. எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _________________ என்று அழைக்கிறோம்.

  1. எரிமலை வாய்
  2. துவாரம்
  3. பாறைக்குழம்புத் தேக்கம்
  4. எரிமலைக் கூம்பு

விடை : எரிமலை வாய்

10. புவி அதிர்வு உருவாகும் புள்ளி _________________ என்று அழைக்கப்படுகிறது.

  1. மேல்மையம்
  2. கீழ்மையம்
  3. புவி அதிர்வு அலைகள்
  4. புவி அதிர்வின் தீவிரம்

விடை : கீழ்மையம்

II. பொருத்துக

1. உட்புறச்செயல்கள் நிலஅதிர்வு அளவைப்படம்
2. கவசம் புவிதட்டு அமிழ்தல்
3. இணையும் எல்லை எரிமலை வெடிப்பு
4. புவி அதிர்ச்சி பசிபிக் பெருங்கடல்
5. கூட்டு எரிமலை சிமா
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. i) ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.

ii) கிளிமஞ்சாரோ ஒரு உறங்கும் எரிமலையாகும்.

iii) தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்

  1. (i) உண்மையானது
  2. (ii) உண்மையானது
  3. (iii) உண்மையானது
  4. (i), (ii) மற்றும் (iii) உண்மையானது

விடை :  உண்மையானது

2. கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்

காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக்குழம்பனைக் கொண்டிருக்கும்.

  1. கூற்று, காரணம் இரண்டும் சரி
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்று, காரணம் இரண்டும் தவறு

விடை : கூற்று, காரணம் இரண்டும் சரி

2. கூற்று I : புவிதட்டுகள் ஒன்றொடொன்று மோதுவதால் மலைத்தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

கூற்று II : கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவி தட்டுகள் நகருகின்றன

  1. கூற்று I தவறு II சரி
  2. கூற்று I மற்றும் II தவறு
  3. கூற்று I சரி II தவறு
  4. கூற்று I மற்றும் II சரி

விடை : கூற்று I மற்றும் II சரி

IV. கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளி.

1. புவியின் நான்கு கோள்களை பற்றி சுருக்கமாக எழுதுக

  • பாறைக்கோளம் – பாறையினால் ஆனது
  • நீர்க்கோளம் – நீரினால் சூழப்பட்டது.
  • வளிக்கோளம் – காற்றினால் சூழப்பட்டது
  • உயிர்க்கோளம் – உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள பகுதி

2. புவியின் உள் அடுக்குகள் யாவை?

புவியின் உள் அடுக்குகள்

  1. மேலோடு
  2. கவசம்
  3. கருவம்

3. மண்கோளம் என்றால் என்ன?

  • பாறைக் கோளத்தின் ஒரு பகுதி மண் கோளம் ஆகும்.
  • இது மண் மற்றும் தூசுகளால் ஆனது
  • பாறை, நீர், வாயு மற்றும் உயிர்க்கோளம் சந்திக்கும் இடத்தில் காணப்படுகிறது

4. புவித்தட்டுகள்-வரையறு

  • புவித்தட்டுகள் பெரிய புவித்தட்டுகள், சிறிய புவித்தட்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளன.
  • இப்புவித்தட்டுகள் கவசத்தின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன. புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் உண்டாகும் வெப்ப சக்தி காரணமாக புவி அதிரச்சி, எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

5. “மடிப்பு” மற்றும் “பிளவு” – சிறு குறிப்பு வரைக

மடிப்பு:

  • கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாக புவித்தட்டுகள் மேலும் கீழும் நகர்வதால் மடிப்புகள் உருவாகின்றன.
  • பாறைகளில் ஏற்படுவதால் மடிப்பு மலைகள் உருவாகிறது. (எ.கா) இமயமலை, ஆல்ப்ஸ் மலை

பிளவு:-

  • புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகளின் மீது அழுத்தம் மற்றும் இறுக்கம் ஏற்பட்டு அவை விரிவடைகிறது.
  • இதனால் பாறைகளில் ஏற்படும் விரிசல் ‘பிளவுகள்’ எனப்படும்.
  • (எ.கா) கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிளவுப் பள்ளத்தாக்கு.

6. ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?

  • ஆழிப்பேரலைகள் எனப்படும் சுனாமி என்பது துறைமுக அலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல் ஆகும்.
  • கடலடியில் தோன்றுமு் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு, பெரும் நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன.
  • இவ்வலைகள் சராசரியாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

7. எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூற்றுகள் யாவை?

புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது.

இதில் காண்ப்படும் முக்கிய கூறுகள்

  1. பாறைக் குழம்புத் தேக்கம்
  2. எரிமலைக் கூம்புகள்
  3. துவாரங்கள்
  4. எரிமலை வாய்

8. புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

  • புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.
  • புவியின் உட்புறத்தில் (கீழ்மையம்) புவி அதிர்வு உருவாகும். இவ் அதிர்வலைகள் கீழ்மையத்திலிருந்து எல்லா திசைளிலும் பரவிச் செல்கின்றன.
  • கீழ்மையத்தின் நேர் உயரே புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள மேல்மையத்தின் அதிர்வின் தாக்கம் அதிகமாக காணப்படும்

9. புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

  • புவி அதிர்ச்சி, அதிர்வலைகளை உருவாக்குகின்றன.
  • தான் ஊடுருவிச் செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

இதன் வகைகள்

  1. முதன்மை அலைகள்
  2. இரண்டாம் நிலை அலைகள்
  3. மேற்பரப்பு அலைகள்

10. பசிபிக் நெருப்பு வளையம் பற்றி எழுதுக.

  • பசிபிக் பெருங்கடல் பகுதியில் பசிபிக் தட்டுடன் மற்றும் கண்டத்திட்டுகள் இணையும் எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாக நிகழும். எனவே அப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.
  • இது புவி அதிர்வுகளும், எரிமலை வெடிப்பும் நிகழும் தீவர பகுதி

V. பின்வரும் வினாக்களுக்கு காரணம் கண்டறிக

1. புவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.

  • கவசம் புவி மேலோட்டின் கீழ் சுமார் 2900 கிலோமீட்டர் அளவில் உள்ள அடுக்காகும்.
  • கவசத்தின் மேல்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்பகுதியல் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.
  • எனவே கவசத்தின் மீது புவி மேலாடு மிதக்கிறது என்பதை அறியலாம்

2. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

  • புவியின் உட்பகுதியில் உருகிய நிலையில் உள்ள பாறைக்குழம்பு புவியில் மேலோட்டில் வெளிபட்டு குளிர்ந்த பாறையாவதே தீப்பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மற்ற பாறைகள் நேரிடையாகவோ, மறைமுகமாகேவா இப்பாறைகளிலிருந்தே உருவாகின்றன.
  • எனவே தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

1. கருவம் மற்றும் மேலோடு

மேலோடு கருவம்
1. நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவி மேலோடு என்கிறோம். புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது.
2. புவிமேலோடு திடமாகவும் இறுக்கமாவும் உள்ளது. இது உட்கருவம் திட நிலையிலும், வெளிக் கருவம் திரவ நிலையிலும் உள்ளது.
3. புவி மேலோட்டில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் என அழைக்கப்படுகிறது. கருவத்தில் நிக்கலும், இரும்பும் அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு “நைப்” என அழைக்கப்படுகிறது.

2. மேல் மையம் மற்றும் கீழ்மையம்

மேல் மையம் கீழ்மையம்
1. புவியின் மேற்பரப்பில் புவி அதிச்சியினால் அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதுி மேல் மையம் ஆகும். புவியின் உட் பகுதியில் அதிர்ச்சி உருவாகும் பகுதி கீழ் மையம் ஆகும்.
2. கீழ்மையத்திலிருந்து வரும் அதிர்வலைகள் மேல் மையத்தை தாக்குகின்றன. கீழ் மையத்திலிருந்து அதிர்வலைகள் எல்லா திசைகளிலும் பரவிச் செல்கின்றன.
3. கீழ் மையத்திலிருந்து வரும் அதிர்வலைகளின் தன்மை விசை, வேகத்திற்கு ஏற்ப புவியின் மேல் மையத்திலிருந்து பாதிப்புகள். இவ்வலைகள் தன்னைச் சுற்றி துணை அலைகளை உருவாக்குகின்றன.

3. விலகும் எல்லை மற்றும் இணையும் எல்லை

விலகும் எல்லை இணையும் எல்லை
1. புவித்தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகும் போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவி கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றது. புவிதட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது சில நேரங்களில் கீழ்நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும்
உதாரணம் –  நடு அட்லாண்டிக் ரிட்ஜி உதாரணம் – ஹிமாலயாஸ்

4. முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள்

முதன்மை அலைகள் இரண்டாம் நிலை அலைகள்
1. முதன்மை அலைகள்  மற்ற அலைகளை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடியவை முதன்மை அலைகளை விட இரண்டாம்நிலை அலைகளின் வேகம் குறைவு
2. இவ்வலைகள் திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாக பயணிக்கும். இவ்வலைகள் திடப்பொருள் வழியாக மட்டுமே பயணிக்க கூடியவை.
3. இதன் சராசரி வேகம் வினாடிக்கு 5.6 கிலோமீட்டர் முதல் 10.6 கிலோமீட்டர் வரையாகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் முதல் 8 கிலோமீட்டர் வரையாகும்.

5. கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை

கவச எரிமலை கும்மட்ட எரிமலை
1. அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் அல்லது கவச வடிவத்தில் மென் சரிவுடன் காணப்படும். இவ்வகை எரிமலை கேடய அல்லது கவச எரிமலை எனப்படும். சிலிகா அதிகமுள்ள எரிமலைக் குழம்பு அதிக பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடித்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். இந்த எரிமலை கும்மட்ட எரிமலை எனப்படும்
உதாரணம் : மெளனலோவா எரிமலை – ஹவாய்த் தீவு உதாரணம் : பாரிக்கியூட்டின் எரிமலை – மெக்சிக்கோ.

VII. பத்தியளவில் விடையளி

1. புவி அமைப்பை விவரி.

புவியின் அமைப்பு

புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலோடு

  • நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவிமேலோடு என்கிறோம். புவியின் தோல் போன்று புவி மேலோடு உள்ளது. இது  5 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.
  • புவிமேலோடு திடமாகவும் இறுக்கமாகவும் உள்ளது. புவிமேலோட்டினை கண்ட மேலோடு மற்றும கடலடி மேலோடு என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
  • இங்கு சிலிகா (Si), அலுமினியம் (Al) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.

கவசம்

  • புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதன் தடிமன் சுமார் 2900 கிலோமீட்டர் ஆகும்.
  • இவ்வடுக்கில் சிலிகா (Si) மக்னீசியம் (Mg) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு சிமா என அழைக்கப்படுகிறது.
  • கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும் கீழ்ப்பகுதியல் உருகிய நிலையிலும் காணப்படுகின்றது. உருகிய நிலையில் உள் பாறைக் குழம்பு “மாக்மா” என அழைக்கப்படுகிறது

கருவம்

  • புவியின் கவசத்திற்கு கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். இது மிக வெப்பமானது.
  • கருவத்தில் நிக்கலும் (Ni) இரும்பும் (Fe) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
  • கருவம் இரண்டு அடுக்குகளை கொண்டது. உட்கருவம் திட நிலையிலும் வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது

2. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.

  • புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு செல்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
  • அவை அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் ஆகும்

அகச்செயல் முறைகள்

  • புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கி செயல்படும் விசைகளை “அகச்செயல் முறைகள்” என்கிறோம்.
  • புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கிழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன.

புவி அகச்செயல் முறைகளால் ஏற்படும் நிகழ்வுகள்

  • புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் மலைத்தொடர்கள், ஒழுங்கற்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.
  • புவிஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வினால் புவி அதிர்ச்சி ஏற்படுகின்றது. இது புவியின் மேல்பரப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைத் செயல்பாடுகளால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஏற்படும்.
  • புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையிலுள்ள பாறைக்குழம்பு துவராம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்வதால் எரிமலைகள் வெடிக்கின்றன.

புவி புறச்செயல்முறைகளால் ஏற்படும் நிகழ்வுகள்

  • இயற்பியல் சிதைவு – பாறை உரிதல், சிறு துகள்களாகக் சிதைவுறுதல் பாறை பிரிந்துடைதல்
  • இரசாயனச் சிதைவு –  ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர் கொள்ளல்
  • உயரினச் சிதைவு – தாவரவேர்கள் மற்றும் மண்புழுக்கள் ஊடுருவுதல், தாவர வேர்கள் விரிவடைதல், விலங்குகள் குழி தோண்டுதல், மனித செயல்பாடுகள்
  • பருப்பொருள் சிதைவு – பாறை வீழ்ச்சி, நிலச்சரிவு, கற்குவியல் வீழ்ச்சி, சேறு வழிதல், பனிப்பாறை வீழ்ச்சி

3. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தை பொறுத்து அதன் வகைகளை விவரி.

எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தை பொறுத்து மூன்று வகைப்படும்

  1. சீறும் எரிமலை
  2. உறங்கும் எரிமலை
  3. செயலிழந்த எரிமலை

சீறும் எரிமலை

நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழப்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படும்

  • உதாரணம் ; செயிண்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்

உறங்கும் எரிமலை

நீண்ட காலமாக எரிமலைக் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலை எனப்படும். இவை திடீரென வெடிக்கும் தன்மையுடையது

  • உதாரணம் ; ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

செயலிழந்த எரிமலை

எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் செயலிழந்த எரிமலைகள் எனப்படும்

  • உதாரணம் ; கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா

4. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள்

நன்மைகள்

  • எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருடகள் மண்ணை வளமிக்கதாக்குகிறது. அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
  • எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
  • உறங்கும் எரிமலையில், செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களாக உள்ளன.
  • எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்கு பயன்படுகிறது.

தீமைகள்

  • எரிமலை வெடிப்பினால் புவி அதிரச்சி, தீடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் நிகழ்கின்றன.
  • வெகு தூரம் பயணிக்கும் பாறைக் குழம்பானது தன் பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகின்றது.
  • அதிக அளவில் வெளிப்படுத்தும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும், மூச்சுவிடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
  • எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

book back qustion online test - click here

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்