Ad Code

Ticker

6/recent/ticker-posts

8 STD social sciences lesson plan|book back qustion and answer|kalvi tv video|FA(b) qustion

kalvi tv videos

book back qustion and answer

கண்டங்களை ஆராய்தல் (ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா & அண்டார்டிகா)

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை _____________

  1. கேப்பிளாங்கா
  2. அகுல்காஸ் முனை
  3. நன்னம்பிக்கை முனை
  4. கேப்டவுன்

விடை : நன்னம்பிக்கை முனை

2.  எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சலந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் _____________

  1. பனமா கால்வாய்
  2. அஸ்வான் கால்வாய்
  3. சூயஸ் கால்வாய்
  4. ஆல்பர் கால்வாய்

விடை : சூயஸ் கால்வாய்

3. மத்திய தரைகடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்க

i). சராசரி மழையளவு 15 சென்டி மீட்டர்

ii).  கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடன் இருக்கும்.
iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும்,
ஈரப்பதத்துடனும் இருக்கும்.

iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன

  1. i சரியானது
  2. ii மற்றும் iv சரியானவை
  3. iii மற்றும் iv சரியானவை
  4. அனைத்தும் சரியானவை

விடை : ii மற்றும் iv சரியானவை

4. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் _____________

  1. பெரிய பிரிப்பு மலைத்தொடர்
  2. இமய மலைத்தொடர்
  3. பிளிண்டர்கள் மலைத்தொடர்
  4. மெக்டோனெல் மலைத்தொடர்

விடை : பெரிய பிரிப்பு மலைத்தொடர்

5. கல்கூர்லி சுரங்கம் _____________ கனிமத்திற்கு புகழ்பெற்றது

  1. வைரம்
  2. பிளாட்டினம்
  3. வெள்ளி
  4. தங்கம்

விடை : தங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அட்லஸ் மலை _____________ கண்டத்தில் அமைந்துள்ளது

விடை : ஆப்பிரிக்க

2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் _____________ ஆகும்

விடை : கிளிமாஞ்சாரோ

3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் _____________ 

விடை : யூக்கலிப்டஸ்

4. ஆஸ்திரேலியாவில் உள்ள மித வெப்ப மண்டல புல்வெளிகள் _____________ என அழைக்கப்படுகின்றன

விடை : நல்லபார் சமவெளி

5. அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் _____________

விடை : தட்சின் கங்கோத்ரி

III.பொருத்துக

1. பின்னாக்கள் புவியிடைக் கோட்டுக்காடுகள்
2. கிரில் உப்பு ஏரி
3. நெருப்புக்கோழி சிறிய செம்மீன்
4. ஐரி ஏரி பறக்க இயலாத பறவை
5. புவியின் அணிகலன் சுண்ணாம்பு பாறை தூண்கள்
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ, 5 – அ

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்

காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்கு காந்த புயலால் ஏற்படுகின்றன

  • கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
  • கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல
  • கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு
  • காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு

விடை : கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

2. கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தாேற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவு பள்ளதாக்கு ஆகும்.

காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு

  • கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம்
  • கூற்று மற்றும் காரணம் உண்மை, ஆனால் கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் அல்ல
  • கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  • காரணம் சரி ஆனால் கூற்று தவறு

விடை : கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம்

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. ஆப்பிரிக்கா தாய் கண்டம் என அழைக்கப்படுவது ஏன்?

புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்காவானது தாய் கண்டம் எனப் புனைப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது

2. ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?

  • நைல் நதி
  • காங்கோ ஆறு
  • நைஜர் ஆறு
  • சாம்பசி ஆறு
  • லிம்போபோ
  • ஆரஞ்சு ஆறு

3. ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?

  • மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி
  • மத்திய தாழ் நிலங்கள்
  • கிழக்கு உயர் நிலங்கள்

4. அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்

  • அண்டார்டிகா ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும்.
  • இது தென்கோடியில் அமைந்துள்ள உலகிலன் ஐந்தாவது பெரிய கண்டமாகும்
  • துருவப்பகுதியில் அமைந்துள்ளதால் இது நிரந்த பனியுடன் மிக குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.

5. ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதேனும் நான்கினை குறிப்பிடுக

  • வேளாண்மை, வளம் சார்ந்த தொழில்கள்
  • மீன் பிடித்தல்
  • உற்பத்தி தொழிலகங்கள்
  • வணிகம் மற்றும் சேவைப்பிரிவு

VI. வேறுபடுத்துக

1.  சாஹேல் மற்றும் சகாரா

சாஹேல் சகாரா
1. இது வடக்கில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்திற்கும் தெற்கில் உள்ள சாவனா புல்வெளிக்கும் இடையில் அமைந்துள்ளது ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ளது
2. சாஹேல் என்பது ஒரு அரை வறண்ட, வெப்ப மண்டல சவானா பகுதியாகும் இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்

2. மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா

மேற்கு அண்டார்டிகா கிழக்கு அண்டார்டிகா
1. மேற்கு அண்டார்டிகா பகுதி பசுபிக் பெருங்கடலை நோக்கி அமைந்துள்ளது அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலகளை நோக்கி அமைந்துள்ளது
2. தென் அமெரிக்காவை நோக்கியுள்ள அண்டார்டிக் தீபகற்பம் ஆண்டிஸ் மலைத் தொடரின் நீட்சி ஆகும் இப்பகுதியின் ரோஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் ஏரிபஸ் ஒரு செயல்படும் எரிமலை ஆகும்.

3. பெரிய பவளத்திட்டு மற்றும் ஆர்டிசியன் வடிநிலம்

பெரிய பவளத்திட்டு ஆர்டிசியன் வடிநிலம்
1. பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்ஸ்லாந்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய வடகிழக்கு பகுதியில் உள்ளது ஆர்டிசியன் வடிநிலப்பகுதி, பெரும் பிரிப்பு மலைத் தாெடருக்கு மேற்கே அமைந்துள்ளது
2. இது சிறிய பவள நுண்ணுயிரிகளால் உருவானது இது உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான படுகையாகும்

VII. காரணம் கூறு

1. எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?

நைல்நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குவதால்இந்நதி எகிப்தின் நன்கொடை என அழைக்கப்படுகிறது

2. வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன

இப்பாலைவனங்கள் வியாபாரக் காற்ற வீசும் மண்டலத்தில் அமைந்துள்ளன. இக்காற்று கண்டங்களின் கிழக்கு விளிம்புகளில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தி மேற்கு பகுதியை அடையும் பொழுது ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாகவும் வீசுகின்றது.

எனவே கண்டங்களின் மேற்கு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன

3. அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கணடம் என அழைக்கப்படுகிறது

உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனேவ அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கணடம் என அழைக்கப்படுகிறது

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1. ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்த விரிவாக எழுதவும்

  • கனிமங்கள் ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதி பொருட்களாகும்
  • இவை நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 10% பங்களிப்பை அளிக்கின்றன
  • பாக்சைட், லைமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் ஆஸ்திரேலியா உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும்
  • தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இரண்டாவது முன்னணி உற்பத்தியாளராகவும்
  • இரும்புத்தாது மற்றும் யுரேனியம் உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகவும்
  • நிலக்கரி உற்பத்தியில் நான்காவது பெரிய உற்பத்தியாளராகவும் இந்நாடு திகழ்கிறது

2. அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி

  • இக்கண்டத்தில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறைநிலைக்கு கீழே இருப்பதால் பெரிய தாவரங்கள் காணப்படவில்லை
  • சிறிய வகை தாவரங்களான பாசிகள், மரப்பாசிகள், படர் பாசிசெடிகள், நுரைப்பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவைகள் பனியை தாங்கி வளர்கின்றன.
  • சிறிய வகை செம்மீன்களான கில்கள் பெரிய திரளாக காணப்படுகின்றன
  • நீலத்திமிங்கலம், கடற்பசு போனற் விலங்கினங்களும் பென்குவின், அல்பட்ராஸ், பாேலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் போன்ற பறவைகளும் காணப்படுகின்றன

3. ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனு ஒன்றினை விளக்கவும்

ஆப்பிரிக்காவின் இயற்கை அமைப்பை 8 பெரும் பிரிவுகளாப் பிரிக்கலாம்

அவை

  1. சகாரா
  2. சாஹேல்
  3. சவானா
  4. பெரிய பிளவு பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள்
  5. கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலங்கள்
  6. சுவாலி கடற்கரை
  7. காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம்
  8. தென் ஆப்பிரிக்கா

சகாரா

  • ஆப்பிரிக்காவின் வடபகுதியல் உலகப் புகழ்ப் பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது
  • இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்
  • இது 9.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது
  • சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய தரைக்கடலும், தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன

FA(b) test qustion

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை _____________

  1. கேப்பிளாங்கா
  2. அகுல்காஸ் முனை
  3. நன்னம்பிக்கை முனை
  4. கேப்டவுன்
 
2.  எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சலந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் _____________

  1. பனமா கால்வாய்
  2. அஸ்வான் கால்வாய்
  3. சூயஸ் கால்வாய்
  4. ஆல்பர் கால்வாய்

3. மத்திய தரைகடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்க

i). சராசரி மழையளவு 15 சென்டி மீட்டர்

ii).  கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடன் இருக்கும்.
iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும்,
ஈரப்பதத்துடனும் இருக்கும்.

iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன

  1. i சரியானது
  2. ii மற்றும் iv சரியானவை
  3. iii மற்றும் iv சரியானவை
  4. அனைத்தும் சரியானவை

4. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் _____________

  1. பெரிய பிரிப்பு மலைத்தொடர்
  2. இமய மலைத்தொடர்
  3. பிளிண்டர்கள் மலைத்தொடர்
  4. மெக்டோனெல் மலைத்தொடர்
5. கல்கூர்லி சுரங்கம் _____________ கனிமத்திற்கு புகழ்பெற்றது
  1. வைரம்
  2. பிளாட்டினம்
  3. வெள்ளி
  4. தங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அட்லஸ் மலை _____________ கண்டத்தில் அமைந்துள்ளது

2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் _____________ ஆகும்

3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் _____________ 

4. ஆஸ்திரேலியாவில் உள்ள மித வெப்ப மண்டல புல்வெளிகள் _____________ என அழைக்கப்படுகின்றன

5. அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் _____________

கருத்துரையிடுக

0 கருத்துகள்