பாடம்.3 சிந்து சமவெளி நாகரிகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
- செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
- செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
- செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
- செம்பு,, வெள்ளி, இரும்பு, தங்கம்
விடை : செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
- பழைய கற்காலம்
- இடைக்கற்காலம்
- புதிய கற்காலம்
- உலோக காலம்
விடை : உலோக காலம்
3. ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
- மண் மிகவும் வளமானதால்
- சீரான கால நிலை நிலவுவதால்
- போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
- பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
விடை : பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் : திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்றும் காரணமும் தவறு.
விடை : கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று : ஹரப்பா வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று தவறானது. காரணம் சரி.
- கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை : கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
3. கூற்று : ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது.
காரணம் : கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று தவறானது. காரணம் சரி.
- கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்று மற்றும் காரணம் தவறானவை..
விடை : கூற்றும் காரணமும் சரி.
4. கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவை பற்றி கூற்றுகளில் எவை சரியானவை?
- தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
- வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
- கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
- பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
விடை : வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
III . கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
அ. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றின் சீரான தன்மை
ஆ. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
இ. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- அ & ஆ
- அ & இ
- ஆ & இ
- அனைத்தும் சரி
விடை : அனைத்தும் சரி
IV. பொருந்தாததை வட்டமிடுக.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்.
விடை : குதிரைகள்
V. தவறான இணையைத் தேர்ந்தெடு
- ASI – ஜான் மார்ஷல்
- கோட்டை – தானியக் களஞ்சியம்
- லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
- ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ___________________ மிகப் பழமையான நாகரிகம்.
விடை : (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்
2. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
3. ___________________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது..
விடை : தானியக்களஞ்சியங்கள்
4. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ___________________ உருவாக்குகிறார்கள்.
விடை : சமூகத்தை (Communities)
IV. சரியா ? தவறா ?
1. மொஹர்கர் புதிய கற்காலம் மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்
விடை : சரி
2. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
விடை : சரி
3. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
விடை : சரி
4. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது
விடை : தவறு
VIII. பொருத்துக.
1. மொஹஞ்சதாரா | மேடான பகுதி |
2. வெண்கலம் | சிவப்பு மணிக்கல் |
3. கோட்டை | உலோகக் கலவை |
4. கார்னிலியன் | இறந்தோர் மேடு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3- அ, 3 – ஆ |
V. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. உலாேகங்களின் பயன்களைக் கூறு
நாம் உலாேகங்களைக் சகாண்டு பல வகைக் கருவிகள் பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கலாம்.
2. நாம் உண்ணும் உணவில் வேக வைத்த உணவு, பச்சையான உணவு என ஒரு பட்டியலை உருவாக்க
சமைத்த உணவு வகைகள்:
- அரிசி – சாப்பாடு, இட்லி, தாேசை
- காேதுமை – சப்பாத்தி, பூரி,
சமைக்காத உணவு வகைகள்:
- பழங்கள் – வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் ஆப்பிள்
3. மிருகங்களையும், மரங்களையும் வழிபடும் பழக்கம் நம்மிடையே உள்ளதா?
ஆம், நமது வழிபாட்டில் காளை, பசு, அரசு, வேம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன
4. ஆற்றங்கரைகள் நாகரிகத் தாெட்டில்கள். ஏன்?
பழம் பெரும் நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில் தாேன்றியதால் ஆற்றங்கரைகளை நாகரிகத் தாெட்டில்களாக கருதப்படுகின்றன
5. ஒரு பாெம்மை நகர்வதாலேயே அதை நவீன கால பாெம்மைகள் என்று பாெருள் காெள்ள முடியாது. சிந்துசமவெளி மக்கள் பாெம்மைகளில் பேட்டரிக்கு (மின் கலம்) மாற்றாக எதைப் பயன்படுத்தினர்?
சிந்து சமவெளி மக்கள் பாெம்மைகளை ‘டெரரகாேட்டா’ காெண்டு உருவாக்கினர். ஆரக்கால்கள் இல்லாத திடமான சக்கரங்களுடன் அவை நகரும் தன்மை காெண்டதாயிருந்தன.
6 . நீ ஒரு தாெல் பாெருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?
நான் ஒரு தாெல்பாெருள் ஆய்வாளராக முதலில் இது வரை இந்தியாவில் நடந்த அகழ்வாராய்வுகளைத் தெளிவாக கற்பேன். அதன் பின்னர் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபடுவேன்.
7. இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இரு பகுதிகளைக் கூறு.
காலிபங்கன் மற்றும் (Lothal) லாேதால்.
8 . சிந்து சமவெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்?
சிந்து சவளி நாகரிகத்தின் திட்டமிட்ட நகரமடிப்பும் நன்கு வடிவமைக்கப்பட்ட பாதாள சாக்கடை முறையும் என்னைப் பெரிதும் கவர்கின்றன.
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்பாேது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?
தற்கால அகழ்வாராய்ச்சிகளில் தாெல் பாெருட்கசள கண்டறிவதற்கு ரரடார் கருவி மூலம் தாெலை நுண்ணுணர்வு முறை பின்பற்றப்படுகிறது.
2. சிந்து சமவெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
சிந்து சமவெளி நாகரிகம் வெண்கல பயன்பாட்டை நன்கு அறிந்திருந்தது. மக்கள் பயன்படுத்திய பாெருட்கள் வெண்கலத்தால் உருவாக்கப் பட்டிருந்ததால் இதனை வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கிறாேம்.
3. சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூற
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனப்படுவதற்கு அதன் திட்டமிட்ட நகர அமைப்பு சிறந்த கட்டடக்கலை, உடல்நலம் மற்றும் சுகாதார முறைகளே காரணமாகும்.
4. கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
சிந்து வெளி நாகரிகம் பாதாள சாக்கடை முறை வியக்க வைக்கிறது. கழிவு நீர் விரைவாக செல்வதற்காக சற்று சாய்வாகவும் சுத்தம் செய்வதற்கான துவாரங்களாேடு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திடக்கழிவுகள் ஒவ்வாெரு வீட்டிலும் வடிகட்டப்பட்ட பின்னரே வடிகால்களுக்கு கழிவு நீர் சென்றது.
5. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.
பெருங்குளம் என்பது அகன்ற செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கமாகும். சுட்ட செங்கற்களைக் காெண்டு கட்டப்பட்டு சுவரில் இயற்கை தார் பூசி நீர் கசிவு தடுக்கப்பட்டிருந்தது. நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டிருந்தது.
6. சிந்துவெளி மக்கள் வெளிநாட்டினருடன் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து காெள்கிறாய்?
ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்தினர். மெசபெரடாேமியாவுடன் கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்து முத்திரைகள் ஈராக், குவைத், சிரியா பகுதிகளில் கிடைத்துள்ளதால் அவர்களாேடு இருந்து வர்த்தக தாெடர்பு உறுதியாடுகிறது.
VII. கட்டக வினாக்கள்
சார்சஸ் மேசன் எதைப் பார்த்தார்?
விடை : செங்கல் திட்டு |
சிந்தவெளி மக்கள் பயன்படுத்திய பொருட்களுள் தற்போது நாம் எதையெல்லாம் பயன்படுத்தகிறோம் (ஏதேனும் மூன்று)
விடை : செங்கற்கள், பானைகள், சக்கரம் |
வேறு என்ன பொருட்கள் எல்லாம் கிடைத்துள்ளன?
விடை : சுழல் அச்சுகள், தந்தத்திலான அளவுகோல் |
சிந்துவெளிமக்களுக்கு தெரியாத மூன்றைக் கூறு?
விடை : இரும்பு, குதிரை, அரண்மனைகள் |
உலகின் பழமையான நாகரிகம் எது?
விடை : மெசபடோமியா நாகரிகம் |
முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு நாய்கள் ஏன்?
விடை : வேட்டையாடவும், பாதுகாப்பிற்காகவும் |
முதன் முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர் யார்?
விடை : சிந்துவெளி மக்கள் |
எந்தெந்த நிறுவனம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு பொறுப்பானது.
விடை : அகழாய்வுத்துறை |
எந்த உலோகம் சிந்துவெளி மக்களுக்கு தெரியாது?
விடை : இரும்பு |
தமிழ்நாட்டில் ஏதேனும் ஆற்றங்கரை நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
விடை : தாமிரபரணி |
சிந்தவெளி நாகரிகம் பரவிய இரண்டு இடங்கள் எவை? (இந்தியாவில் எல்லைக்குள்)
விடை : கலிபங்கன், லோத்தல் | சிந்து வெளிநாகரிகங்கள் குழந்தைகளுக்கான நகரங்கள் என நாம் கூறு முடியுமா?
விடை : அங்கு கிடைத்த பல்வேறு விதமான பொம்மைகள் வாயிலாக சிந்துவெளி நகரங்கள் குழந்தைகளுக்கான நகரங்கள் என அறிய முடிகிறது. |
0 கருத்துகள்