Ad Code

Ticker

6/recent/ticker-posts

6Std Social Science|பருவம்-3|lesson plan|பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

தேதி :

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு:பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

கற்றல் விளைவுகள்

*பண்டைய காலத்தில் தமிழ் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியம் பற்றிய அறிவு பெறுதல்.

*சேர, சோழ,பாண்டிய அரசர்கள் ஆட்சி குறித்தும் அவர்களின் சமகாலத்தவரான குறுநில மன்னர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுதல்.

துணைக் கருவிகள்

*QR code video

*தென்னிந்திய வரைபடம்

*Kalvi Tv video

பாட அறிமுகம்

பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் குறித்து கேட்டு பாடத்தை துவங்குதல்.

படித்தல்

கொடுக்கப்பட்ட பாடத்தினை  நன்கு பொருளுணர்ந்து படிக்க வேண்டும் புதிய வார்த்தைகளை அடிக்கோடிட வேண்டும்.

மனவரைபடம்



தொகுத்தலும் வழங்குதலும்

*சங்கம் என்னும் சொல் மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய புலவர்களின் காலத்தைக் குறிக்கிறது.

*சேரர்

உதயன் சேரலாதன்

சேரன் செங்குட்டுவன்

*சோழர்

கரிகால் சோழன்

கிள்ளிவளவன்

*பாண்டியர்

நெடுஞ்செழியன்

நன்மாறன்

*தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவுகளை உறுதி செய்கின்றன.

*கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் முடிவுரை தொடங்கியது.

*தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றினர் அவர்களின் ஆட்சிக்கான ஆதாரங்கள் சமண பௌத்த இலக்கியங்களில் காணப்படுகின்றன.

வலுவூட்டுதல்

QR code video மற்றும் இணையச் செயல்பாடுகள் வழியாக விளக்குதல்

மதிப்பீடு

1)படைத்தலைவர்______ என அழைக்கப்பட்டார்

2) நிலவரி ______என அழைக்கப்பட்டது

குறைதீர் கற்றல்

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் வாய்ந்த மாணவர்கள் வாயிலாக பாடப்பொருளை மேலும் விளக்குதல்.

எழுதுதல்

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் ஐவகை நிலங்கள் பற்றி எழுதுதல்.


தொடர்பணி

பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை கண்டறிந்து எழுதி வரச் செய்தல்.


Book back questions Answers- click here

Book back questions online Test- click here

Kalvi Tv video- click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்