Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு – 1 

காலஅளவு : 3.00 மணி 

பகுதி – I

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.  (14*1=14)

1. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்த தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

அ)சீனா

ஆ) ஜப்பான்

இ) கொரியா

ஈ) மங்கோலியா

2) ஜெர்மனியே உலகின் தலைவன் என கூறிய ஜேர்மன் பேரரசர்____

அ) உட்ரோ வில்சன்

ஆ) இரண்டாம் கெயசர் வில்லியம்ஸ்

இ)16ஆம் லூயி

 ஈ)இரண்டாம் நிக்கோலஸ்

3) பொருளாதார பெருமந்தம் அமெரிக்காவில் _____ஆம் ஆண்டு ஏற்பட்டது

அ)1927 ஆ)1928 இ)1929ஈ)1930

4) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

அ)ஊட்டி  ஆ)கொடைக்கானல் 

இ)தொட்டபெட்டா   ஈ) ஆனைமுடி

5) கீழ்கண்டவற்றுள் இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள நாடு

அ)சீனா   ஆ) நேபாளம்

 இ)மியான்மர்  ஈ)பாகிஸ்தான்

6)கேரளா மற்றும் கர்நாடக கடற் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன

அ)லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ் 

இ)மாஞ்சாரல்  

ஈ)ஜெட்ற்காறோட்டம்


7) இந்தியாவை இரு சம பாகமாக பிரிப்பது

அ)கடக ரேகை

ஆ) மகர ரேகை 

இ)நிலநடுக்கோடு

ஈ) கிரீன்விச் தீர்க்க கோடு

8) இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது

அ)1  ஆ)2  இ)3  ஈ)4

9) லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது

அ)18  ஆ)25 இ) 30 ஈ) 35


10) முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது

அ)வேளாண்மை

ஆ) தானியங்கிகள் 

இ)வர்த்தகம்

ஈ) வங்கி

11) இந்திய பொருளாதாரம் என்பது

அ)வளர்ந்து வரும் பொருளாதாரம் 

ஆ)தோன்றும் பொருளாதாரம் 

இ)இணை பொருளாதாரம்

ஈ) அனைத்தும் சரி

12) நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார அறிஞர்

அ)அமர்த்தியா சென் 

ஆ)எம்.எஸ் . சுவாமிநாதன்

இ)மன்மோகன்சிங்

ஈ)அப்துல் கலாம்


13)சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

 (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

 (ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூகசேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

 (iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது. 

(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். *


அ) ii & iv சரியானவை

ஆ) iii & iv சரியானவை

இ) i & iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை

14)எந்தக்குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
 1. சர்க்காரியாகுழு 
2. ராஜமன்னார் குழு 
3. M.N. வெங்கடாசலையா குழு 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு

 அ) 1, 2 & 3 ஆ) 1 & 2 இ) 1 & 3 ஈ) 2 & 3 

பகுதி -II

எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும் வினா எண் 28 க்கு கட்டாயமாக விடையளிக்கவும் 10*2=20

15) பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களை பட்டியலிடுக?

16) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?

17) பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

18) இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக?

19) இலட்சத்தீவு கூட்டங்கள் பற்றி விவரி?

20) இந்தியாவின் நான்கு பருவ காலங்களைக் குறிப்பிடுக?

21) தேசிய அவசர நிலை என்றால் என்ன?

22) கால நிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக?

23) குடி உரிமை என்பதன் பொருள் என்ன?

24) நடுவன் அரசின் அமைச்சர்கள் தர நிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளனர்?

25) நிதி மசோதா குறிப்பு வரைக?

26) நாட்டு வருமானம் வரையறு?

27) மதிப்புக்கூட்டு முறையை எடுத்துக் காட்டுடன் வரையறு?

28) சட்டமன்ற மேலவை உள்ள மாநிலங்களை பட்டியலிடுக?

பகுதி-III

எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும் வினா எண் 42 க்கு கட்டாயமாக விடையளிக்கவும் 10*5=50

29) கோடிட்ட இடங்களை நிரப்புக

 I)_____ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது

II) மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ____ என அழைக்கப்படுகிறது

III) இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் _____பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

IV) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன்____ஆகும்

V)____மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.

30)பொருத்துக

I) கண்ணாடி மாளிகை  -  தென் கிழக்கு கடற்கரை சமவெளி

II) சோழமண்டல கடற்கரை  -  ஜவகர்லால் நேரு

III) முகவுரை - பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி

IV) சட்டப்பிரிவு 356 - வெர்செய்ல்ஸ்

V)GST - மாநில நெருக்கடி

31) பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பீடு?

32)உலகபோர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39)இந்தியாவில் காலனிய நீக்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனை குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்?

33) ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக?

34)அ) வேறுபடுத்துக

    I) வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று

 II) மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

ஆ) காரணம் கூறுக

I) மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை

35) இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றி விவரி?

36) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?

37) இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

38) இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக?

39)GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? வகைகளை விவரி?

40) நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு  தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி?

41) கீழ்காண்பனவற்றிக்கு காலக் கோடு வரைக

1900 முதல் 1920 வரையிலான ஆண்டுக்கு உட்பட்ட முக்கிய ஐந்து உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.

42) உலக வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கும்

ஆஸ்திரியா ஹங்கேரி 

பிரான்ஸ் 

ஜெர்மனி

கிரேட் பிரிட்டன்

கிரீஸ்


பகுதி IV

பின் வரும் வினாக்களுக்கு விடை அளிக்கவும்      2*8=16

43) அ)முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக

 அல்லது

ஆ) அடிப்படை உரிமைகளை குறிப்பிட்டு விரிவாக ஒரு கட்டுரை வரைக


44) அ)கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களை குறிக்கவும்

கங்கைச் சமவெளி

 மேற்கு தொடர்ச்சி மலை 

சோட்டா நாகபுரி பீடபூமி 

கஞ்சன்சங்கா 

வடகிழக்குப் பருவக் காற்று வீசும் திசை 

குறைவான மழை பெறும் பகுதி 

லட்சத்தீவுகள்

சோழமண்டலக் கடற்கரை

அல்லது

ஆ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களை குடிக்கவும்

தக்காண பீடபூமி 

எவரெஸ்ட் சிகரம்

 காரகோரம் 

அதிக மழை பெறும் பகுதி 

கடற்கரை சமவெளி 

தார் பாலைவனம் 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

 தென் மேற்குப் பருவக் காற்று வீசும் திசை



10 STD social sciences first Revison book back one mark Question online Test -click here


10 STD social sciences first Revison India map online Test - click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்