பண்டையக்கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
நாள் :
பாடம்: சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: பண்டையக்கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும், சங்க காலம்
கற்றல் விளைவுகள்
*பண்டையகாலத் தமிழ் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கிய சான்றான சங்க இலக்கியத்தைப் பற்றிய அறிவைப் பெறுதல்.
*மூவேந்தர்கள் எனும் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் ஆட்சி குறித்தும் அவர்களின் சமகாலத்தவர்களான குறுநில மன்னர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுதல்.
*பண்டையக்கால தமிழகத்தின் நிர்வாக முறை, சமூக பொருளாதார நிலைகள் குறித்தும் கற்றுக் கொள்ளுதல்.
*களப்பிரர் காலத்தை புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
சங்க கால இலக்கியம் என்பது என்ன? என வினாக்கள் கேட்டு பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
படித்தல்
ஆசிரியர் பாடப் பகுதி முழுவதையும் குரல் ஏற்றத்தாழ்வும் படித்துக் காட்டுதல். மாணவர்களும் அவ்வாறே ஆசிரியர் மேற்பார்வையில் படித்தல், அதிலுள்ள புதிய வார்த்தைகள் கடின வார்த்தைகளுக்கு சக மாணவர் ஆசிரியர் மூலம் விளக்கம் பெறுதல்.
மனவரைபடம்
தொகுத்தல் மற்றும் வழங்குதல்
*சங்கம் என்னும் சொல் புலவர்களின் குழுமத்தைக் குறிக்கிறது. இவ்வமைப்பு மதுரையில் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கியது.
*சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தமிழக பகுதிகளை ஆட்சி செய்தனர்.
*தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவுகளை உறுதி செய்கின்றன.
*கி,பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் முடிவுரை தொடங்கியது. தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றினர் அவர்களின் ஆட்சிக்கான ஆதாரங்கள் சமண, பௌத்த இலக்கியங்களில் காணப்படுகின்றன.
வலுவூட்டுதல்
மாணவர்களிடம் தமிழ்நாடு நிலவரை படத்தைக் கொடுத்து அதில் சேர ,சோழ பாண்டியப் பேரரசின் எல்லைகளை குறைக்கச் சொல்லி ஆசிரியர் அவற்றை சரிபார்த்தல்.
மதிப்பீடு
மாணவர்களை சங்க கால ஆட்சி அமைப்பு முறையை விளக்கமாக எடுத்துக் கூறச்செய்து மதிப்பீடு செய்தல்
குறைதீர் கற்பித்தல்
மதிப்பீடு மற்றும் வழங்குதலில் பாடற்பொருள் குறைந்தபட்ச கற்றல் அடைவு பெராத மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு பாடப் பொருளை மீண்டும் எளிய முறையில் விளக்கம் கொடுத்தும், சில எளிய செயல்பாடுகள் மூலமும் குறைந்தபட்சம் கற்றல் அடைவினை பெற வைத்தல்.
எழுதுதல்
சங்க கால ஆட்சி அமைப்பு பற்றி படித்துக் கொண்டு எழுதி வரவும்.
தொடர்பணி
சங்ககால சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் பெயர்களை எழுதி வரவும்.
QR code video
கல்லனை - click here
0 கருத்துகள்