பணம் மற்றும் கடன்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .
1. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் _________ (தங்கம் / இரும்பு)
விடை : தங்கம்
2. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம். (சென்னை / மும்பை)
விடை : மும்பை
3. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை (அமெரிக்க டாலர் / பவுண்டு)
விடை : அமெரிக்க டாலர்
4. ஜப்பான் நாட்டின் பணம் என்று அழைக்கபப்படுகிறது. (யென் / யுவான்)
விடை : யென்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ………………………………………………………. வணிகத்தின் முதல் வடிவம்.
விடை : பண்டமாற்றும் முறை
2. பண விநியோகம் ……………………………… பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை : நான்கு
3. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் ……………………………….. .
விடை : நாசிக்
4. பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு …………………………………..க்கு உள்ளது.
விடை : அரசுக்கு
5. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ……………………………………….. .
விடை : பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
III) பொருத்துக.
1. அமெரிக்க டாலர் | தானியங்கி இயந்திரம் |
2. நாணய சுழற்சி | பணத்தின் மாற்று |
3. ஏ.டி.எம் | சர்வதேச அங்கீகாரம் |
4. உப்பு | சவுதி அரேபியா |
5. ரியால் | 85% |
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ |
IV குறுகிய வினாக்களுக்கு விடையளி
1. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
- பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில் காலப்போக்கில் சிக்கல்கள் உருவாகின.
- இப்பிரச்சனைகள் விடைகாண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
- ஆகவே இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம். இவ்வாறு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
2. பண்டைய காலப் பணம் என்பது யாது?
தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டது. இதுவே பண்டைய காலப் பணம் எனப்படும்.
3. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை ?
- தோல்
- மணிகள்
- ஓடுகள்
- புகையிலை
- உப்பு
- சோளம்
அடிமைகளை கூட பண்மாற்று முறையில் பண்டத்திற்கு மாற்றாக கொடுக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறன்றன
4. நறுமணப்பாதை என்றால் என்ன ? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தமிழகத்தின் கிழக்கு கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
- இவற்றில் மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணிப்பாதை என்று அழைக்கப்பட்டது.
5. இயற்கைப் பணம் என்றால் என்ன ?
தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் நாடுகளுக்கு இடையேயான பண்ட மாற்றத்தில் பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்டன. பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்டன. இவையே இயற்கை பணம் என்று அழைக்கப்பட்டன.
6. குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?
- உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும், விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
- ஏழை எளிய மக்களின் பணமாக இவை பயன்படுத்தப்பட்டன. இதனால் குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிக அளவு அச்சடிக்கப்பட்டன.
7. அந்நியச் செலாவணி என்றால் என்ன?
நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி அந்நியச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
V விரிவான விடையளி
1. நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
- வங்கி சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப் பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது.
- இதன் மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத் தேவையான பணத்தினை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல வங்கிக்கு செல்லாமலேயே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது.
- இதேபோல முன்னதாகப் பணம் பெற்று, பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
- பணப்பரிமாற்றம் செய்வதற்குக் காசோலை அல்லது கேட்பு வரைவோலை போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இணையவழி பரிமாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இதன் மூலம் நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
- இதேபோல் அலைபேசி மூலமும் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
2. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்பட தொடங்கியது . 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது. இது 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டது
- பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தில் பெரும் பங்கு தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. - இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
- அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படிஇந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
3. பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுத்தலாகவும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணத்தின் செயல்பாடுகள்
- பரிமாற்ற ஊடகம்
- கணக்கு அலகு
- மதிப்பீட்டினைச் சேமித்தல்
பரிமாற்ற ஊடகம்
ஒரு நாட்டில் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.
கணக்கு அலகு
ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் விலை ` 50 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது என்று பொருள். ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது
மதிப்பீட்டினைச் சேமித்தல்
பணத்தினைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்துக்கான வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.
4. பண விநியோக முறையைப் பற்றி எழுதுக.
பண விநியோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை
- ப2 = ப1 + அஞ்சலகசேமிப்பு வங்கிக் கணக்குகளில்சேமிக்கப்பட்டுள்ளதொகை
- ப3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை
- ப4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை
VI. சரியானக் கூற்றை எழுதுக.
அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்
- 1 சரி, 2 தவறு
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
- 1 தவறு, 2 சரி
விடை : 1 தவறு, 2 சரி
ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.
- இரண்டு கூற்றுகளும் சரி
- இரண்டு கூற்றுகளும் தவறு
- 1 சரி, 2 தவறு
- 1 தவறு, 2 சரி
விடை : 1 சரி, 2 தவறு
0 கருத்துகள்