இந்திய அரசியலமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
- குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
- இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
- இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
- இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
விடை : இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
- ஒரு முறை
- இரு முறை
- மூன்று முறை
- எப்பொழுது இல்லை
விடை : ஒரு முறை
3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
- வம்சாவளி
- பதிவு
- இயல்புரிமை
- மேற்கண்ட அனைத்தும்.
விடை : இயல்புரிமை
4.மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
- சமத்துவ உரிமை
- சுரண்டலுக்கெதிரான உரிமை
- சொத்துரிமை
- கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை : சொத்துரிமை
5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
- கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
- கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்
- ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
- பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
விடை : பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
- சமய உரிமை
- சமத்துவ உரிமை
- அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
- சொத்துரிமை
விடை : அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
- உச்சநீதி மன்றம் விரும்பினால்
- பிரதம மந்திரியின் ஆணையினால்
- தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
8. நமது அடிப்படை கடமைகளை இடமிருந்து பெற்றோம்.
- அமெரிக்க அரசியலமைப்பு
- கனடா அரசியலமைப்பு
- ரஷ்யா அரசியலமைப்பு
- ஐரிஷ் அரசியலமைப்பு
விடை : ரஷ்யா அரசியலமைப்பு
9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
- சட்டப்பிரிவு 352
- சட்டப்பிரிவு 356
- சட்டப்பிரிவு 360
- சட்டப்பிரிவு 368
விடை : சட்டப்பிரிவு 360
10. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு | 2. ராஜமன்னார் குழு | 3. M.N. வெங்கடாசலையா குழு |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியானவிடையைத் தேர்ந்தெடு |
- 1, 2 & 3
- 1 & 2
- 1 & 3
- 2 & 3
விடை : 1 & 2
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை _________________ தோன்றியது
விடை : அமெரிக்க ஐக்கிய நாட்டில்
2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ____________________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை : சச்சிதானந்தா சின்கா
3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ____________________
விடை : 26 நவம்பர் 1949
4. _________ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்படுகின்றன
விடை : ஐந்து
5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _________ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை : 51 A
III. பொருத்துக
1. குடியுரிமைச் சட்டம் | ஜவகர்லால் நேரு |
2. முகவுரை | 42-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் |
3. சிறிய அரசியலமைப்பு | 1955 |
4. செம்மொழி | 1962 |
5. தேசிய அவசரநிலை | தமிழ் |
விடை:- 1-இ, 2-அ, 3-ஆ, 4-உ, 5-ஈ |
IV. குறுகிய விடை தருக
1. அரசியலமைப்பு என்றால் என்ன?
- ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
- அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
- ’சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ’சிவிஸ்’ (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
- இதன் பொருள் ஒரு ’நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும்.
- இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலுக்கெதிரான உரிமை
- கல்வி கலாச்சார உரிமை
- சமயச்சார்பு உரிமை
- அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
- நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
நீதிப்பேராணை வகைகள்
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)
- கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
- தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
- ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
- தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)
5. இந்தியாவின் செம்மொழிகள் எவை?
- தமிழ்
- சமஸ்கிருதம்
- தெலுங்கு
- கன்னடம்
- மலையாளம்
- ஒடியா
6. தேசிய அவசரநிலை என்றால் என்ன?
- போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
- போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
- ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.
- இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.
7. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
- சட்டமன்ற உறவுகள்
- நிர்வாக உறவுகள்
- நிதி உறவுகள்
V. விரிவான விடை தருக
1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
- இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
2. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
சமத்துவ உரிமை
- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்
- பொது வேலை வாய்ப்புகளினல் சம வாய்ப்பளித்தல்
- தீண்டாமையை ஒழித்தல்
- இராணுவ மற்றும் கல்வி சார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்
சுதந்திர உரிமை
- பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்ககள், அமைப்புகள் தொடங்க உரிைம, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
- குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
- வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை
- தொடக்க கல்வி பெறும் உரிமை
- சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிைம
சுரண்டலுக்கெதிரான உரிமை
- கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்
- தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்
கல்வி கலாச்சார உரிமை
- சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு
- சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை
சமயச்சார்பு உரிமை
- எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும் பரப்பும் உரிமை
- சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
- எந்தவொரு மதத்தையும் பரப்புவுதற்காக வரி
- மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
- தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்
3. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.
- நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
நீதிப்பேராணை வகைகள்
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
- தடையுறுத்தும் நீதிப்பேராணை
- ஆவணக் கேட்பு பேராணை
- தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்
தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
ஆவணக் கேட்பு பேராணை
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.
4. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக
அடிப்படை உரிமைகள் | அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் |
இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை. | இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை . |
அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை சுருக்கவோ, நீக்கவோ முடியாது. | இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும். |
இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயற்படுத்த முடியும். | எந்த நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது |
இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை. | இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை. |
இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன . | இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்தும் பொழுது, சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது. |
0 கருத்துகள்