சுருக்கமாக விடையளிக்கவும்
1. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
- முசோலின் – இத்தாலி
- ஹிட்லர் – ஜெர்மனி
- பிராங்கோ – ஸ்பெயின்
2. ’மண்’ – வரையறு
- மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
- பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
- மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.
- தன்னிறைவு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை
- தீவிர வேளாண்மை
- வறண்ட நில வேளாண்மை
- கலப்பு வேளாண்மை
- படிக்கட்டு முறை வேளாண்மை
4.ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
5.உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிமன்றத்தின் அதிகாரங்கள் யாவை?
- சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
- அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
- முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
- மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் `2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
6.உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
- மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
- வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
- உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
- இது பண்டங்களை தடையற்றதாகவும் தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.
விரிவான விடையளி
7.அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக
- அணிசேரா இயக்கம்’ என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
- இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
- அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
- இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்
- இந்தியா – ஜவகர்லால் நேரு
- யுகோஸ்லாவியா – டிட்டோ
- எகிப்து – நாசர்
- இந்தோனேசியா – சுகர்னோ
- கானா – குவாமே நிக்ரூமா
கொள்கை மாற்றம்
- இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது.
- வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும் தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை இன்னும் நடைமுறையில் உள்ளது
8.இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
இந்தியாவில் 8 மண் பிரிவுகள் உள்ளன
அவை
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- காடு மற்றும் மலை மண்
- வறண்ட பாலை மண்
- உப்பு மற்றும் காரமண்
- களிமண் மற்றும் சதுப்பு நில மண்
1. வண்டல் மண்
- சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
- புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
- கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி சமவெளிப் பகுதிகளில் காண்ப்படுகிறது
- நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்
2. கரிசல் மண்
- தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
- டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
- மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம்,
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
- பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்
3. செம்மண்
- பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
- இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுவதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
- தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட் பகுதிகளில் காண்ப்படுகிறது
- பருத்தி, நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் பயிரிட ஏற்ற மண்
4. சரளை மண்
- வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) காரணமாக உருவாகிறது.
- இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்ஸைடுகளால் உருவானது.
- உயரமான மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளுவதில்லை
- அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண்ப்படுகிறது
- காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிட ஏற்ற மண்
5. காடு மற்றும் மலை மண்
- பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது.
- காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
- இம்மண்ணில் செம்மையான மணல் மற்றும் பாறைத்துகள்கள் கலந்து காணப்படுகிறது.
- மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
- பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்
6. வறண்ட பாலை மண்
- வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
- வெளிர் நிறமுடையது, தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
- இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதிகளில் காண்ப்படுகிறது
- நீர் பாசன வசதியுடன் தினை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.
7. உப்பு மற்றும் கார மண்
- சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
- வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது
- ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது
- அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை.
8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்
- அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது
- இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மை உடையது
- கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம். போன்ற பகுதிகளில் காணப்படுகிறது
- நெல், சணல் முதலியன பயிரிட ஏற்ற மண்
9. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
அமைச்சரவை தொடர்பானவை
- முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
- அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
- அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
- அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
- மாநில அரசு வழக்குரைஞர்
- மாநில தேர்தல் ஆணையர்
- அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை
- சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
- சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
- சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
- எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
10.உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக
- உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
- வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
- உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
- இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
- மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காலக்கோடு வரைக
11.உலக வரலாற்று முக்கிய நிகழ்வுகள் 1900-1920
1911- சீனா குடியரசு நாடானது
1912-முதல் பால்கன் போர்
1914-முதல் உலகப்போர் தொடக்கம்
1917- ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
1918-முதல் உலகப்போர் முடிவு.
உலக வரைபடத்தில் குறிக்கவும்
பசிபிக் பெருங்கடல்
ஜப்பான்
முத்து துறைமுகம்
இத்தாலி
இங்கிலாந்து
இந்திய வரைபடத்தில் குறிக்கவும்
கரிசல் மண்
பாலைமண்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தக்காண பீடபூமி
வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை
வண்டல் மண்
மன்னார் வளைகுடா
ஆரவல்லி
0 கருத்துகள்