இந்தியாவில் கல்வி வளர்சி
நாள் :
வகுப்பு: எட்டாம் வகுப்பு
பாடம் : சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: இந்தியாவில் கல்வி வளர்ச்சி
கற்றல் விளைவுகள்
* பண்டைய கால இந்தியாவில் கல்வி முறையைப் பற்றிய அறிதல்
*பண்டைய கால கல்வி முறைகளை புரிந்து கொள்ளுதல்.
*இடைக்கால இந்தியாவில் கல்வி முறை புரிந்து கொள்ளல்.
*நவீன கல்வி முறை பற்றி அறிதல்.
அறிமுகம்
கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளை பெறுதலும், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இந்தியாவில் கல்வி வளர்ச்சி பற்றி கருத்துக்களை அறிவோம்.
படித்தல்
மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் பாடப்பகுதியை படித்தல், புரியாத மற்றும் புதிய சொற்களை மாணவர்கள் அடிக்கோடுதல்.
புதிய வார்த்தைகள்
வித் - அறிதல்
மடாலயங்கள் - புத்த துறவிகள் வாழும் இடங்கள்
குருகுலம் - பாடம் கற்கும் இடம்
விகாரம் - புத்த துறவிகளின் ஆலயம்
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோவில்கள், பாட சாலைகள், குரு குலங்கள், ஆகியவற்றில் அப்பகுதிக்கு ஏற்றவாறு கல்வி வழங்கப்பட்டது.
*குருக்களும் அவர்களுடைய சீடர்களும் ஒன்றாக வசித்து, அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தனர்.
*தட்சசீலம் நாளந்தா,வல்லபி, விக்ரமசீலா, ஒடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய பல்கலைக் கழகங்கள் விகாரங்களின் தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன.
*இடைநிலை கல்விமுறை இஸ்லாமிய கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளை வகைப்படுத்துகிறது.
*போர்த்துகீசியர் தொடங்கிய நவீன கல்விமுறையில் இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவங்கினார். மேல்நிலைப்பள்ளிகள் முதல் கல்லூரி நிலைகள் வரை 1575 ஆம் ஆண்டு கோவாவில் தொடங்கப்பட்டது.
வலுவூட்டல்
ஒவ்வொரு சிறு குழுவும் தங்களின் மனவரைபடம் தொகுத்தலை வழங்குதல்,பாட கருத்துக்களை வாழ்வியல் சூழலில் தொடர்புபடுத்தி ஏளிய செயல்பாடுகள் மூலம் ஆசிரியர் விளக்குதல்.
மதிப்பீடு
1) வேதம் என்ற சொல்_______லிருந்து வந்தது
2) இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்_____
3) இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது____
4) தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர்____
5) வேதம் என்ற சொல்லின் பொருள்_____
வலுவூட்டல்
மாணவர்கள் பாடத்தின் உட்பொருளை புரிந்து கொண்டதை சோதித்தல்.புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் எளிதாக விளக்குதல். அறிந்துகொண்ட பாடப்பகுதியில் மேலும் புதிய செய்திகளை தொடர்புபடுத்தி ஆசிரியர் செறியூட்டல்.
எழுதுதல்
புத்தகக் பிண்ணனியில் உள்ள வினாக்களை சமூக அறிவியல் நோட்டில் எழுதுதல்.
தொடர்பணி
மாணவர்களை பண்டைய கல்வி முறை, இடைநிலைக் கல்வி முறை, நவீன கல்விமுறை போன்றவற்றை அட்டவணைப்படுத்துதல்.
0 கருத்துகள்