அலகு தேர்வு-1
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மதிப்பெண்கள்- 50 - நேரம்:1.30 மணி
I. சரியான விடையைத் தேர்வு செய்க (5x1=5)
1) பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அ) பிரிட்டன் ஆ)பிரான்ஸ்
இ) அமெரிக்கா ஈ) டச்சு
2) பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மன் ஆ) ரஷ்யா
இ) இத்தாலி ஈ) பிரான்ஸ்
3)இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்
அ)2599கி.மீ ஆ)2933 கி.மீ இ
3214 கி.மீ ஈ) 2814
4) எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்
அ) சட்டப்பிரிவு 352 ஆ) சட்ட பிரிவு 356
இ) சட்ட பிரிவு 360 ஈ) சட்ட பிரிவு 368
5) பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19இல்_______லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
அ)91.06 ஆ)92.26 இ)80.07 ஈ)98.29
II. கோடிட்ட இடங்களை நிரப்புக: ( 2x1=2)
6) வியட்நாம் தேசிய வாதிகள் கட்சி _______ இல் நிறுவப்பட்டது
7) அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக_______தேர்ந்தெடுக்கப்பட்டார்
II. பொருத்துக: (3x1=3)
8) எம்டன் - தமிழ்
9) செம்மொழி-நாட்டுவருமானம்/மக்கள் தொகை
10)தலாவருமானம்-சென்னை
IV. ஏதேனும் ஐந்திற்கு மட்டும்ம் சுருக்கமாக விடையளிக்க: (5x2=10)
11) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
12) பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
13) இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
14) இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக?
15) இந்தியாவின் செம்மொழிகள் எவை?
16) அரசியலமைப்பு என்றால் என்ன?
17)நாட்டு வருமானம் வரையறு?
V. ஏதேனும் மூன்று வினாவிற்கு மட்டும்ம் விடையளி 3x5=15
18)அ)வேறுபடுத்தும்
I) மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
II) மேற்கு கடற்கரை சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரை சமவெளி
ஆ) காரணம் கூறுக
I) இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன?
19) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?
20) இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி?
21) அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக?
22) நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்கள் விவரி?
23)காலக்கோடு வரைக . 5x1=5
1900 முதல் 1920 வரையிலான ஐந்து முக்கிய உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக;-
24) உலக வரைபடத்தில் குறிக்கவும் (5×1=5)
ஜெர்மன், இத்தாலி, மொராக்கோ, துருக்கி, பிரான்ஸ்
25) இந்திய வரைபடத்தில் குறிக்கவும் (5×1=5)
ஆரவல்லி மலைத்தொடர், K2 சிகரம்,தக்காணபீடபூமி
கங்கை, கட்ச் வளைகுடா
Unit test question Pdf - click here
India map online Test - click here
0 கருத்துகள்