GO NO : 111 , Date : 11.10.2021
ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை நீக்கம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு.
ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நேரத்தில் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் நாளில் அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யப்படும் ஒரு சூழல் ஏற்படும் போது அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அவர்களுக்கு சலுகைகள் அனைத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை தவிர்க்கக்கூடிய வகையில் அந்த நடைமுறை மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் ஓய்வு பெறக்கூடிய காலத்தில் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அதற்கான பாதிப்பை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்