விழுப்புரம் செஞ்சி சாலையில் இருக்குது அரசலாபுரம் கிராமம். இங்கதான் இந்த கோழி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
1992 ல் ஆய்வாளர்கள் வீரராகவன் மங்கை ராகவன் ஆகியோர் இதை கண்டு பிடிச்சாங்க.
இந்தக் கல்லுல கம்பீரமான கோழியின் உருவம் இடம் பெற்று இருக்கு.
இந்த வாசகத்தை, முகையூரு மேற்சேரி ஆடிக் கருக்கிய கோழி அப்படின்னு படிச்சாரு மூத்த கல்வெட்டு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
அதாவது, தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு நடக்கிற மாதிரி கோழிச் சண்டையும் வீரச் சண்டையா நடத்தப்பட்டு வந்துச்சு.
இப்படி நடந்த போரில் முகையூர் என்கிற ஊரின் மேற்சேரி கோழி வெற்றி பெற்றது. ஆனால் அப்புறம் அது செத்திடுச்சு.
வெற்றி பெற்று ஊருக்குப் பெருமை சேர்த்த அந்தக் கோழியின் நினைவாகத் தான் இந்த நினைவுக்கல் நடுகல் எடுக்கப்பட்டு இருக்கு.
இந்த நடுகல்லின் காலம் 3 ஆம் நூற்றாண்டு. அதாவது இன்னையில் இருந்து 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தமிழ்நாட்டில் 3 ல் இருந்து 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் குறைவான வரலாற்று சான்றாதாரங்கள் கிடைச்சிருக்கு.
அதுல குறிப்பிட்ட இடத்தை பிடிச்சிருக்கு இந்த அரசலாபுரம் கோழி நடுகல்.
0 கருத்துகள்