Ad Code

Ticker

6/recent/ticker-posts

10TH SOCIAL SCIENCE - ACTIVITY 15 - QUESTION & ANSWER

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
 செயல்பாடு - 15 
 மதிப்பீடு 
 
1 உலக வெப்பமயமாதலுக்கான காரணங்களைப் பட்டியலிடவும்

 * புவி மேற்பரப்பில் ஏற்படும் சீரான வெப்பநிலை உயர்வே உலக வெப்பமயமாதல்

 * வெப்பமயமாதலுக்கான காரணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இயற்கையால் ஏற்படுவது , மற்றொன்று மனிதனால் உருவாக்கப்படுவது.

* எரிமலை வெடிப்பு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகின்றது.

* கார்பன்டை ஆக்சைடு வெளியேறுதலும் , மீத்தேன் வாயு அதிகரித்தலும் புவி வெப்பமயமாதலுக்குக் காரணங்களாகும்.

* மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சுரங்க வேலைகளும் வெப்பமயமாதலுக்கு் காரணங்கள் ஆகும்.

* பெருங்கடல்களின் கூடுதல் வெப்பக் கொள்ளளவு மற்றும் அமிலமயமாதலும் காரணமாகின்றன.

* காடழிப்பு உலக வெப்பமயமாதலுக்குக் முக்கிய காரணமாக அமைகிறது.


2 கோவிட்-19 2வது அலையின் காலத்தில் நோய் பரவலினால் மக்கள் சந்தித்த பிரச்சினை என்ன? 
அதற்கான காரணங்கள் யாவை?

மக்கள் சந்தித்த பிரச்சனைகள்

    பொருளாதார மந்தம் , கல்விக்கூடங்கள் திறக்க இயலாச்சூழல் , விளையாட்டு , சுற்றுலா , வேலைவாய்ப்பு ,பொழுது போக்கு , போக்குவரத்து , சுகாதாரத்துறை போன்ற பல துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மிக அதிக அளவில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளானதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் நோய்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

காரணங்கள்

     அரசாங்கம் அறிவுறுத்திய சமூக இடைவெளி தொடர்பான பல அறிவிப்புகளைப் பின்பற்றாததுவும் , முறையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததும் முக்கிய காரணங்களாகும்.

* அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதும் முக்கிய காரணமாகும்.

* காற்று இல்லாத வளிமண்டலத்தை நாம் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சுவாசிக்கும் காற்றுக்கு நாம் மரங்களைச் சார்ந்துள்ளோம்.

* நம் வாழ்வில் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

* காற்றில்உள்ள கார்பனை மரங்கள் எடுத்துக்கொள்வதால் கார்பனின் அளவு குறைகிறது.

* காடுகள் எரிக்கப்படும் பொழுது கார்பன் வளிமண்டலத்தில் அதிகமாகிறது. இதனால் புவி வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.


4 மரங்கள் நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்கும் நிகழ்வு


அ) சுவாசித்தல்

ஆ) ஆக்ஸிஜனேற்றம்

இ) ஒளிச்சேர்க்கை

ஈ) கார்பனேற்றம்

விடை : ஆ ) ஆக்ஸிஜனேற்றம்


5 உலகச் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஒத்த நாடுகளின் உச்சி மாநாடு -----
நாட்டில் நடைபெற்றது.

அ) பெரு

ஆ) பிரேசில்

இ) பிரான்ஸ் 

ஈ) ஏதேன்ஸ்

விடை : ஆ ) பிரேசில்


6 . ------  முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்


அ) விவசாய நிலங்களை 

ஆ) கிராமங்களை

இ)மரம் வெட்டுதலை

ஈ) விலங்குகள் இடப் பெயர்ச்சியை

விடை : இ ) மரம் வெட்டுதலை

7 இயற்கை மனிதர்களுக்கு ------- பலதரப்பட்ட வழங்குகிறது.

அ) விலங்குகளை

ஆ) உணவுப் பொருட்களை

இ) பறவைகளை

ஈ) வளங்களை

விடை : ஈ ) வளங்களை 

8 தமிழகம் -------   சதவீதம் காடுகளைக் கொண்டுள்ளது.

அ) 10

ஆ ) 15

இ) 17

ஈ) 20

விடை : ஆ ) 15


9 காடுகளைப் பாதுகாக்க நீ பின்பற்ற நினைக்கும் காரியங்களை வரிசைப்படுத்தவும் . காடுகள் இல்லையெனில் என்ன நிகழும்? சிந்தித்து விடையளி.

* மரம் வெட்டுதலை முறைப்படுத்த வேண்டும்.

* காட்டுத்தீ ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

* மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் புதிய மரக்கன்றுகளை நடுதல் மூலம் பாதுகாக்கலாம்.

* தரிசு நிலங்களில் விதைகளை விதைத்து காடுகளை உருவாக்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்