Ad Code

Ticker

6/recent/ticker-posts

Tamil quotes about Tulsi




துளசி எப்படி வந்தது?

 துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர். அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மகாலட்சுமி, ஆகியன உண்டாகி வெளியே வந்தன. இதனால் பகவான் விஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் திவலை அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த திவலையின் உருவமாகப் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கெளதுஸ்பம் ஆகிய மூன்றை மட்டும் மகா விஷ்ணு தன்னுடன் வைத்துக் கொண்டு. மற்றவற்றைத் தேவர்களுக்கு வழங்கினார்.

 துளசியில் இருக்கும் தெய்வாம்சம்: 

துளசியின் அடியான தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினிதேவர் இருவர் ஆகியோர் இருக்கின்றனர். துளசி இலையின் நுனியில் பிரம்மன், நடுவில் மாயோன் மற்றும் லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, காயத்திரி முதலானோர் வசிக்கின்றனர். 


துளசியின்அருள்:

 துளசியை நினைத்தாலே நம் பாவங்கள் நீங்கும் என்கின்றனர் ஆன்மிக அருளாளர்கள். துளசியை காப்பாற்றுபவன், அதாவது அதை வளர்த்துப் பாதுகாப்பவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை தெய்வமாக வழிபட்டால் அவருக்கு ஆயுள் பலம் பெருகுவதோடு, மக்கட் பேறு, புகழ், செல்வம் முதலியவை பெருகும். துளசி கஷ்ட மாலை (துளசி கட்டை மாலை) ஒருவன் தன் கழுத்தில் அணிந்தால், அவனின் பாவங்கள் நீங்கும் என கூறப்படுகிறது. துளசி தீர்த்தத்தைப் பருகி வந்தால் அவன் பரமபதம் அடைவார் என்றும் ஆன்மிக குருக்கள் கூறுகின்றனர். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

 துளசி உலகில் உள்ள சுமார் 3,50,000 தாவர வகைகளில் ஒன்று. இது மருந்துப் பொருளாகவும் மணப்பொருளாகவும் இறைவழிபாட்டிற்கு உரியதாகவும் பயன்படுகிறது. தாவரவியலில் செடி,கொடி,பூண்டு, மரவகைகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. அவற்றின் இயல்புகளைக் கொண்டு தாவரங்களைப் பல குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். ‘ஆசிமம் சாங்டம்’ என்பது துளசியின் தாவரவியல் பெயர். இது ‘லேமியேஸி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. துளசி என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல் ஆய்வாளர் து+ளசி எனப்பிரித்து ‘ஒப்பு இல்லாதது’ எனப் பொருள் விளக்கம் தருவர். ஆம்! துளசி ஓர் ஒப்பற்ற மருந்துப் பொருள். துளசியைக் குறித்துப் பல புராணக் கதைகள் வழக்கத்தில் உள்ளன. துளசி கார்ப்பு சுவை உடையது. நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கற்பூரத்துளசி, நாட்டுத்துளசி, சிவத்துளசி, சிறுதுளசி, நாய்துளசி, நிலத்துளசி, பெருந்துளசி எனத் துளசியில் பலவகை உண்டு. துளசி வகை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை மருத்துவப் பண்பு உண்டு. வயிற்று உளைச்சல், தாகம், கரமாந்தம், சூடு ஆகிய நோய்களை நல்ல துளசி போக்கும். நச்சு, கபம், கடிநச்சு ஆகியவற்றைச் செந்துளசி நீக்கும். இருமல், மார்புச்சளி ஆகியவற்றை கருந்துளசி குணப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு, குத்திருமல் நோய்க்கும் நாய்துளசி நல்ல மருந்தாகும். எலிக்கடி நச்சை நீக்கவும் பிற நச்சுக்கடிகளுக்கும் முள்துளசி நல்ல மருந்தாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்