1 .துளசி :-
பொதுவாகவே மனிதனுக்கு தேவையான மருத்துவ குணங்கள் நிறைந்த, இரவிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாலே இதனை புனிதமான காக்கும் கடவுளாக வணங்குகிறோம்.
2 .மருள் என்னும் பாம்பு கற்றாழை.
இந்த செடி வளர அதிக தண்ணீரும் சூரிய ஒளியும் தேவையில்லை. வீட்டில் எந்த இடத்திலும் வளர்க்கலாம். இது காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி நல்ல ஆரோக்கியமான ஆக்சிஜனை இரவிலும் வெளிப்படுத்தி உதவுகிறது.
3 .கற்றாழை :--
இது மற்ற தாவரங்கள் வெளிப்படுத்தும் ஆக்சிஜனையும் சுத்தப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த காற்றாலை.
4 .நித்தியகல்யாணி :-
இது புழுதி காற்றையும் வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி சுத்தப்படுத்தி தூய ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த காற்றாக வெளிப்படுத்தும். இதற்கு வாஸ்து குறிப்புகள் இல்லாததால் வீட்டில் எந்த இடத்திலும் வைத்து வளற்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
5 .லெமன்கிராஸ்:-
இது காற்றில் கலந்துள்ள பாக்டீரியாக்களை உறுஞ்சி நல்ல நருமணமுள்ள ஆக்சிஜனை தருவதோடு சோர்வு நீங்கி அமைதி கிடைக்கும், கொசுதொல்லைகளும் இருக்காது.
6 .மணிபிளான்ட்:-
காற்றை சுத்தப்படுத்தி அதிக ஆக்சிஜனை தருகிறது. வீட்டில் தென்கிழக்கு திசையில் படரவிட செல்வ வளம் பெறுகும். இது விஷத்தன்மை உடையது, கவணம் தேவை.
7 .ஐவி:-
இது படரும் தன்மை உடையது, தூசிக்காற்றை தூய்மையாக்கி நல்ல ஆக்சிஜனை தருவதோடு ஆஸ்துமா, அலர்ஜியை குணமாக்கும்.
8 .கோல்டன்_போடோஸ் மற்றும் WEEPING_FIG எனப்படும் வெள்ளள் :-
இவைகள் காற்றில் கலந்துள்ள விஷவாயுக்களை சுத்தப்படுத்தி நல்ல ஆரோக்கியமான ஆக்சிஜனை வழங்குகிறது. ஆகையால் எரிவாயுக்கள் பயன்படுத்துகின்ற இடங்கள், சமையலறை மற்றும் கழிவறைகளில் வைத்து வளர்ப்பது சிறப்பு.
9 .BAMBOO_PALM எனப்படும் மலைப்பனை :-
இது கெட்டுப்போன காய்கறிகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றம், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகையை சுத்தப்படுத்தும். இதற்கு குறைந்த அளவு சூரிய ஒளியும், தண்ணீரும் போதுமானது. வீட்டின் ஹால் மற்றும் வாசற்படி முன்பாக வளர்ப்பது சிறப்பு.
10.RUBBER_PLANT_எனப்படும் சீமை ஆலமரம்:-
இது வெயில் படாத இடங்களிலும் வளரும் தன்மை உடையது. அசுத்தமான காற்றை உறுஞ்சி சுத்தமான ஆக்சிஜனை தருகிறது. இதை கற்றாழையின் அருகில் வளர்ப்பது சிறப்பு. கூடுதலாக, வீட்டின் வாசற்பகுதியில் இடம் இருந்தால் ஆடுதொடா_மற்றும்_புங்கனை வார்ப்பதால் ஆலைக்கழிவுகளால் உண்டாகும் எரிவாயுக்கள், வாகன புகை மற்றும் தூசிகள் நிறைந்த மாசடைந்த வெப்ப காற்றை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த நல்ல குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி சுவாசிக்க உதவுகிறது.
0 கருத்துகள்