Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்க்கை முறையில் உளுந்து சாகுபடி முறை

 


🌹உழவு

* பொதுவா இரண்டு முறை உழவு செய்வது நல்லது இராண்டவது முறை உழவு செய்யும் முன் அடியுரமாக ஊட்டமெற்றிய தொழுவுரம்  அல்லது ஏக்காருக்கு அசோஸ்பைரில்லம் 4 கிலோ பாஸ்போ பாக்டிரியா2 கிலோ ரைசோபியம் 1 கிலோ சுடோமோனஸ் 1கிலோ தருவது செடியின் ஆரம்ப வளர்ச்சியை தரும்.

💐விதை நேர்த்தி செய்யும் முறை:-

தரமான விதையை தேர்வு செய்து ஏக்கருக்கு 8 கிலோ எடுத்து சுத்தமான தண்னிரில் கழுவி பின்பு ஆரிய வடிச்சதண்னிரில் 1கிலோ விதைக்கு  சுடோமோனஸ் அல்லது வீரிடி 10கிராம் அசோஸ்பைரில்லம்20 கிராம் விதம் நன்கு கலந்து ஒரு பாலிதின் பேப்பரில் நிழலில் காயவைக்து விதைக்கவேன்டும் .

இதன் முலம் பயிரின் ஆரம்ப வளர்ச்சிக்கும் மற்றும் பூஞ்ஞான தொற்று வேர் அலுகல் மஞ்சள் வைரஸ் நோயை கட்டுபடுத்தலாம்.


🌷பாசனம் செய்யும் முறை:-

மண்னின் தன்மைக்கேற்ப்ப வாரம் ஓரு முறை தண்ணீர் தரலாம் முக்கியமா விதைத்த 3 நாள் பூ பூக்கும் காலம்25 நாள் மற்றும் காயாக மாறூம்45 வது நாள் 60வது தரவேண்டும் இதில் தவறும் பட்ச்சத்தில் விளைச்சலை பாதிக்க வாய்ப்புண்டு பாசன வசதி இல்லாதோர்  மண்னின் ஈரத்தை பயன்படுத்தி வரிசை நடவு செய்தால் தெளிப்பான் முலமாக நன்கு இலை காய் வேர்பகுதியை நனைத்து கொடுக்கும் போது செடியின் வளர்ச்சியை நிலைபடுத்துவது எளிது..

🌺வளர்ச்சி ஊக்கிகள்:-

குறுகிய காலம் என்பதால் மாத வாரியா பிரித்து முதலாவது நாள் தரைவழி தண்ணீர் தரும் போது கட்டாயம்  "சூடோமோனஸ்" எக்கருக்கு 1லிட்டர் விதம் கொடுத்து எதெனும் நோய் தோற்று இருந்தால் சரி செய்து பின்பு வளர்ச்சி ஊக்கியை கொடுக்கும் போது அதன் செயல்பாடு சிறப்பாக அமையும்.

 ஜீவாமிர்தம்200லிட்டர்,அமிர்தகரைசல்200லிட்டடர், லிட்டர் ,பஞ்சகாவியம்2லிட்டர்,EM2லிட்டர்,புண்ணாக்கு கரைசல்,மீன் அமிலம் 2லிட்டர் எதேனும் ஒன்றை கொடுக்கும் போது அதிக விளைச்சல் பெற முடியும்.

*பொதுவாக பூ பூக்கும் நேரத்தில் 25லிருந்து 35நாள் வரை இரண்டு முறை தேமோர் கரைசல் 500மிலிஅல்லது Em கரைசல் 300மிலி தெளிப்பது அதிகமான காய்களை பெறும் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று.


🐞பூச்சிக்கட்டுப்பாடு:-

பூச்சு தாக்கத்தை கட்டுப்படுத்த இயற்கை வழி தீர்வு வாரம் ஒருமுறை10லிட்டருக்கு வேப்பஎன்னெய்கரைசல்50மீலி,பத்திலைக்காசயம்400மீலி,கற்பூரக்கரைசல்500மீலீ அக்கினி அஸ்திரம் 400மீலீ கொடுக்கலாம் அல்லது பெவேரிய பேசியான அல்லதுவெர்டி சிலியம் லக்கானி50 மீலி கொடுக்காலம் 

🌼மஞ்சள் வைரஸ் நோயைக்கட்டுப்படுத்த வசம்பு கரைசல்1லிட்டர் கற்பூரகரைசல்500 மீலீ Perfext திராவம் 10லிட்டரருக்கு20மீலீ  நோய் தாக்ககம் உள்ளஒரு சில செடிகளை பிடுங்கி தூரமா அப்புறபப்படுத்துவது நல்லது மேலும் ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டும் அட்டை சுரிய ஒளியில் இயங்கும் விளக்கு பொறி அமைக்கலாம் வரப்பு பயிராக வெள்ளை சோளம்,சூரியக்காந்தி பூ செடி,செவந்தி பூ செடி, ஆமனக்கு,தட்டைப்பயறு நடுவதன் முலமாக பூச்சு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் மேலே சொன்ன வழி முறைகளை செய்வதன் முலமாக அதிகமான விளைச்சலை பெற முடியும் 

இயற்கை விவசாயத்தை நம்புவோம்! கண்டிப்பா நல்லா இருப்போம் 





 திரு.பிரிட்டோ ராஜ் 

(வேளான் பொறியாளர்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்