Ad Code

Ticker

6/recent/ticker-posts

What you mean by murals in Tamil?

 


வியம் எழுதும் போது அதன் அடித்தளத்தின் தன்மையைப் பொருத்து அதன் நிலைத்த தன்மை மாறுபடும். “பாறைகளில் அமைந்த சுவர்களின் மீதும், செங்கல்லால் கட்டப்பட்ட சுவர்களின் மீதும், களிமண், சுண்ணாம்புக் கலவையால் அடித்தளத்தை ஏற்படுத்தி அவ்வடித்தளம் ஈரமாக இருக்கும் போதே அவற்றின் மீது வரையப்படும் ஓவியத் தொழில் நுட்பத்தினை ஈரப்பத அடித்தளமுள்ள சுவரோவியமுறை என்று அழைக்கின்றனர். அடித்தளம் உலர்ந்த பின் வரையப்படும் ஓவியத்திற்கு ஈரப்பதமற்ற அடித்தளம் கொண்ட சுவரோவியம் என்று பெயர். உலர்ந்த அடித்தளத்தின் மீது பசை கலந்த வண்ணக் கலவை கொண்டு ஓவியம் தீட்டும் தொழில் நுட்பத்தினைப் பற்றோவிய முறை அல்லது கெட்டிச்சாய வண்ண ஓவியமுறை என்று அழைக்கின்றனர்”  என்பதன் மூலம் அன்றைய காலத்தில் இருந்த ஓவிய நுட்பத்தினை உணரமுடிகிறது. நீர்நிலைகளை அழகோவியமாக வரைந்த செய்தி குறித்து சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது. இதனை,


“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)

என்ற அடிகள் உணர்த்தும். அன்றைய கால ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று உரை வகுப்பர். தனித்த உருவம் மட்டுமல்லாது பல்வேறு உருவங்களை ஒன்றாக சேர்ந்து எழுதும் முறைமைகளை அன்றைய ஓவியர்கள் அறிந்துள்ளமையை இப்பாடல்வழி உணரமுடிகிறது. பல வண்ணப் பூக்களுடன் காட்சியளிக்கும் நீர் நிலையினை ஓவியம் செய்வது அன்றைய காலத்தில் ஓவியமாக்கள் கொண்டுள்ள நுட்பத்தினை மட்டுமல்லாது பல வண்ண நிறங்களையும் ஓவியத்தில் பயன்படுத்தியுள்ளமை புலப்படுகிறது

பண்டைய காலங்களில் ஒவ்வொரு அரசனுடைய அரண்மனையிலும் சித்திரமாடம் என்னும் ஓவியங்கள் தீட்டப்பட்ட கட்டடம் தனியே அமைக்கப்பட்டிருக்கிறது. பாண்டியன் நன்மாறன் என்ற அரசன் தனது சித்திர மாடத்தில் தங்கியிருந்த போது அங்கேயே உயிர் நீத்துள்ளான். அவன் அங்கேயே உயிர் நீத்ததால் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. பாண்டியனின் சித்திரமாடத்தை மாங்குடி மருதனார்,

“கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து” (மதுரை.484-485)

என்ற அடியில் பாண்டியனுடைய அரண்மனையில் செம்பாற் செய்யப்பட்ட செவ்விய சுவர்களில் சித்திரம் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டார் போன்ற விளங்குதலையுடைய கோயிலிடத்து (அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி’ என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை வகுப்பார். நக்கீரர் பாடிய நெடுநல்வாடையிலும் பாண்டியனுடைய சித்திரமாடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“செம்பு இயன்றன்ன செய்யுறு நெடுஞ்சுவர்” (நெடு.112)

என்ற அடி குறிப்பிடுகிறது. எனவே அன்றைய காலங்களில் சித்திரம் வரைவதற்கென்றே சித்திரமாடம் என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அரசன் மனமகிழ்விற்காக அங்கு வந்து தங்கிச் சென்றுள்ளான். தங்கும்போது அவன் மனதை மகிழ்விக்கும் ஓவியக் காட்சிகளைச் சுவர்களின் மீதும், அங்குள்ள பலகை, துணிகளின் மீதும் வரைந்து அலங்கரித்துள்ளனர்.

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து மலையிலே முருகப்பெருமான் கோயிலைச் சார்ந்த ஒரு சித்திரமாடம் இருந்ததைக் குன்றம்பூதனார் என்னும் புலவரின் பாடல் மூலம் அறியமுடிகிறது. திருப்பரங்குன்றத்தில் வரையப்பட்ட ஓவியத்தை,

“ஒண்சுடர் ஓடைக்களினு ஏய்க்கும்நின் குன்றத்து,
எழுதுஎழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்” (பரி.18:27-29)

என்று பரிபாடல் எடுத்துரைக்கும். இவ்வோவியம் மன்மதனுடைய அம்புகள் செய்யும் தொழிலை நிலையாக உடைய படைப்பயிற்சியிடத்தை ஒக்கும் என உரை வகுப்பர். இதே சித்திரமண்டபத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் குறித்து நப்பண்ணனார் என்னும் புலவர் விரிவாக விளக்கியுள்ளார். இதனை,

“இரதி காமன், இவள் இவன் எனாஅ,
விரகியர் விவை, வினா இறுகப்போரும்;
‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல்உரு
ஒன்றிய படிஇது’ என்று உரை செய்குவோரும்;
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்”(பரி.19:48-53)

என்று பாடியுள்ளார். முருகப்பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச் சித்திர மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதமமுனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன என்றும், இச்சித்திரங்களைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களாக கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன சித்திரம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் பாடியுள்ளார். “திருச்சி மாவட்டம், திருச்சி தாலுகாவில் உள்ள திருவெறும்பூர் கோயிலைச் சார்ந்து சித்திரக்கூடம் என்னும் மண்டபம் பண்டைக் காலத்தில் இருந்த செய்தியைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன” (6) என்று மயிலை. சீனிவேங்கடசாமி குறிப்பிடுகிறார். பண்டைய காலத்தில் சித்திரங்களை எழுதி வைப்பதற்கென்று உள்ள மாடங்களில் இயற்கை ஓவியங்களும், புராணக்கதைகளும் ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது


கருத்துரையிடுக

0 கருத்துகள்