Ad Code

Ticker

6/recent/ticker-posts

தளவானூர் குடைவரைக் கோயில் தற்போதைய புகைப்படங்கள்

விழுப்புரம் மாவட்டம், தளவானூரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில். இக்கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கிபி 600 - 630) அவர்களால் கட்டப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது!




முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கிபி 600 - 630) குடைவரைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கப் படைப்பு தளவானூர் சத்ருமல்லேசுவர் ஆலயம்.



விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28கிமீ தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6கிமீ பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம்

தளவானூர் முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பட்டதென கல்வெட்டுச் செய்தியால் அறிகிறோம்


வாயிற்காவலர்கள்  குடைவரை முகப்பின் கிழக்கிலும் மேற்கிலும் அகலமான, ஆழமான கோட்டங்களில் வாயிற்காவலர்கள் வடிக்கப்பட்டுள்ளனர்



1/2 கருவறைக் காவலர்கள் கரண்ட மகுடம், மகுடம் மீறிய சடைக்கற்றைகள், செவியில் பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல்..


2/2 கருவறைக் காவலர்கள் கழுத்தில் சரப்பளி, கைகளில் தோள்வளைகளும், வளையல்களும் அணிந்து இருவருமே நேர்ப்பார்வையராக உள்ளனர்!

தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரணம் முகப்பு பெற்ற ஒரே கோயில் சத்ருமல்லேசுவர் குடைவரை என்பது தளவானூர் சிறப்பாகும்! 




1/2 மகரங்களின் தோகை பல சுருள்களாய் பிரிந்து விரிந்து பரவியுள்ளது. மகரங்களின் வாயிலிருந்து வெளிவருவது போல் காட்டப்பட்டிருக்கும்

மகரங்கள் அகலமாய் வாய் திறந்து ஒன்றையொன்று நோக்கிய பாவனையும், அவற்றின் துதிக்கைகளும் மிக்க அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன




2/2 அழகிய கொடிக்கருக்கு உத்திரத்தின் வாஜன, வலபிப் பகுதியில் பக்கவாட்டில் திரும்பியவாறு அமர்ந்துள்ள சிறு மகரங்களின் திறந்த வைகளில் முடிகிறன..

சத்ருமல்லேசுவரர் - சிறப்பியல்புகள்! 
1) பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே குடைவரை. இதனை கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம்!
2) தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரண முகப்புப் பெற்ற ஒரே குடைவரை! 3) முழுமை பெற்ற முதல் முகப்புக் கபோதம் பெற்ற குடைவரை

4) முதல் பூமிதேசம் அமைப்பினை கொண்ட குடைவரை 5) முன்றில் படிப் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் குடைவரை! 




கருத்துரையிடுக

0 கருத்துகள்