பாசன நீரில் கரைந்துள்ள உப்பினால், பயிர்களுக்கு பல விதங்களில் நேரடி, மறைமுக விளைவுகள் ஏற்படுவதோடு, மண் வளமும் பாதிக்கப்படுகிறது.பயிர் சாகுபடியில், முளைப்புக்கு ஏற்ற மண்வளம் இருக்க வேண்டும். பொதுவாக, விதைப்புக்கு முன், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பை நீக்க வேண்டும்.பயிருக்கு தேவையான நீரை பாய்ச்சும் போது, நீரில் கலந்துள்ள உப்பானது, வேரின் அடிமட்டத்துக்கு கீழ் சென்றுவிடுகிறது.உவர் தன்மை இல்லாத நீரில், நீர் வெளியேறும் வடிகால் வசதியுள்ள நிலங்களில் பயிர்கள் வளரும்.மிதமான உவர் நீரில் காய்கறிகள், உருளைக்கிழங்கு, மணிலா, வேலிமசால், வாழை மற்றும் பூ வகைகள் சாகுபடி செய்யலாம். ஓரளவு வடிகால் வசதியுள்ள மண்ணில் மக்காச்சோளம், கம்பு, கொண்டைக்கடலை, எள், சூரியகாந்தி, குதிரை மசால் மற்றும் கேழ்வரகு ஆகியன பயிர் செய்யப்படுகின்றன.
குறைந்த வடிகால் வசதியுள்ள நிலங்களில் கரும்பு, நெல் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. நடுத்தர உவர்நீர் பாசனத்தில் மிளகாய், தீவனச்சோளம், மக்காச்சோளம் ஆகியனவும், வடிகால் வசதியுள்ள மண்ணில் மாதுளை, கொய்யா, பப்பாளி, கோதுமை, சப்போட்டா ஆகியவையும், குறைந்த வடிகால் வசதியுள்ள பகுதியில் இலந்தை, தீவனபுற்கள், சப்போட்டா ஆகியன வளர்க்கலாம்.அதிக உவர் நீர் பாசனத்தில் மிளகாய், மரவள்ளி, இலந்தை, குதிரை மசால், கறிவேப்பிலை ஆகியவையும், ஓரளவு வடிகால் வசதியுள்ள மண்ணில் சோளம், கோதுமை, பாராபுல், கொழுக்கட்டை புல் வளரும், குறைந்த வடிகால் வசதியுள்ள நிலத்தில் சவுண்டால் மரம் வளர்க்கலாம்
மிக அதிகஅளவுள்ள உவர் நீரில் பருத்தி, தென்னை, சவுக்கு, நீர்புல், சுகர்பீட் ஆகியன வளர்க்கலாம். ஓரளவு வடிகால் வசதி கொண்ட நிலத்தில் தீக்குச்சி மரம், ஆச்சாமரமும், குறைந்த வடிகால் கொண்ட மண்ணில் கருவேலம், கருங்காலி மரங்கள் வளர்க்கலாம். அபரிமிதமான உவர் நீரில் சுகர்பீட் மரமும், வாகை மரமும் வளர்க்கலாம். மிதமான களர் உவர் நீரில் முயல்மசால், தானியப்பயிர்கள், மல்பெரியும் வளரும்.ஓரளவு வடிகால் வசதியுள்ள மண்ணில் பெர்முடாபுல், கர்னால்புல், கரும்பு, பருத்தி சாகுபடி செய்யலாம். குறைந்த வடிகால் வசதியுள்ள நிலத்தில் நெல்லில் சில ரகங்களும், நீர்புல்லும் வளர்க்கலாம். அதிக களர் உவர் நீரில் ஜிப்சம் உபயோகித்து, பயிரிடலாம்.
0 கருத்துகள்