Ad Code

Ticker

6/recent/ticker-posts

கன்றுகளுக்கான தீவனம்

ன்றுகளுக்கு பாலை கறந்த உடனே அளிக்க வேண்டும். அதாவது பாலின் வெப்பநிலை கன்றுகளின் உடல் வெப்பநிலைக்கு சமமாக இருத்தல் வேண்டும்.கன்றுகளுக்கு பாலும், குறைந்த அளவு கலப்பு தீவனமும் அளிக்கலாம். அதாவது மக்காச்சோளம், அரிசி தவிடு, கோதுமை தவிடு, தாது உப்பு போன்ற கலப்பு தீவனங்களை அளிக்கலாம்.3 மாதம் முதல் ஒரு வருடம் வரை உள்ள கன்றுகளுக்கு 100 கிராம் அடர்தீவனமும், 1 கிலோ பசுந்தீவனமும், 200 கிராம் பதப்படுத்தப்பட்ட புல்லையும் தீவனமாக அளிக்கலாம்.கன்று பிறந்த மூன்று மாதத்திற்கு பிறகு அவை தானாகவே பசுந்தீவனங்களை எடுத்துக் கொள்ளும்.அதன் பிறகு கன்றுகளுக்கு கொடுக்கும் பாலின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

தாய் மாடுகளிடமிருந்து கன்றுகளை பிரித்து வளர்த்தல்



கன்று பிறந்தவுடன் அவற்றை தாயிடமிருந்து பிரித்து வளர்ப்பதே இந்த முறையாகும்.இந்த முறையினால் கன்றுகளுக்கு அதன் தாயும், தாய் மாட்டிற்கு அதனுடைய கன்றும் தெரியாமல் வளர்க்கலாம்.மேலும் சீம்பால் குடிக்க வைத்து 4 வது நாட்களில் அவற்றின் தாய்களிடமிருந்து பிரித்துவிட வேண்டும்.கன்றுகளை பிறந்த உடனே பிரிப்பது நல்லது. ஏனெனில் அப்போதுதான் அவற்றிற்கு தாயிடமிருந்து பிரியும்போது ஏற்படும் தவிர்ப்பை தவிர்க்க முடியும்.இவ்வாறு பிரித்த கன்றுகளுக்கு பாத்திரத்தில் பால் வைத்து, குடிக்க செய்து வளர்க்கலாம். 

நன்மைகள்

கறவையின் போது கன்றுகள் இறந்தால் தாய் மாடுகள் கறவைக்கு நிற்காது.மேலும் தாய் மாடு இறந்தால் கன்றுகள் பால் குடிக்க சிரமப்படும்.தாயிடமிருந்து பிரித்து வளர்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படாது. இந்த முறையினால் கன்றுகள் தீவனம் விரைவாக எடுத்துக்கொண்டு, விரைவில் பருவமடையும்.கன்றுகளை பிரித்து வளர்ப்பதால் அவற்றிற்கு தேவையான பாலினை அளந்து கொடுக்கலாம். இதனால் வளர்ப்புச்செலவு குறையும்.பிரித்து வளர்ப்பதால் கன்றுகள் உயரிய தீவனத்தை எடுத்துக்கொண்டு விரைவில் வளர்ச்சியடையும்.

கன்று இறப்பை தவிர்க்கும் முறை !



கன்றுகளை கொட்டைகையில் வைத்து பராமரிக்கும் போது ஒரே வயதுடைய கன்றுகளை மட்டுமே ஒரே அறையில் வைத்து பராமரிக்கலாம்.ஒவ்வொரு கன்றுகளுக்கும் தேவையான இட வசதியை ஏற்படுத்தி தருவது சிறந்தது.பெரும்பாலும் கன்றுகள் மழை மற்றும் குளிர்காலங்களில் இறக்க நேரிடலாம். அதனை தவிர்க்க மழை மற்றும் குளிர் காலங்களில் கொட்டகை ஈரமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அதாவது கொட்டகையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குளிர்க்காலத்தில் வைக்கோலினை பரப்பி அதன்மீது கன்றுகளை படுக்க வைக்க வேண்டும். கோணிப்பைகளை கொண்டும் கன்றுகளை போர்த்தி பாதுகாக்கலாம்.கன்றுக்கழிச்சல், சளி, மலச்சிக்கல், தோல்நோய் போன்றவற்றிற்கு தாமதமாக சிகிச்சை அளிப்பதனால் இறப்பு ஏற்படலாம்.கன்றுகளுக்கு 1 வயது வரை அவ்வபோது குடற்புழு நீக்கம் செய்வதால் அவற்றின் இறப்பை தவிர்க்கலாம்.கன்றுகளுக்கு அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ பால் அளிப்பதனாலோ, நேரடியாக மாட்டுத்தீவனத்தை அளிப்பதனாலோ இறப்பு ஏற்படலாம். எனவே கன்றுகளுக்கு ஏற்ப தீவனங்களை அளிக்க வேண்டும்

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை!

ஒரு கன்று பிறந்தவுடன் அது கிடாவா இல்லை கிடாரியா என்று தான் முதலில் ஆர்வமாக பார்ப்போம். அதை தவிர அவை என்ன எடையில் உள்ளது என கவனிக்க வேண்டும். அதாவது கன்றுகளின் எடையை கண்டிப்பாக அறிய வேண்டும்.பசுவின் எடையில் கன்றுகள் பத்து சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவை ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஒரு வேளை கன்றுகள் எடை குறைந்து பிறந்திருந்தால் அவற்றை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேலும் மாடுகள் பிரசவத்திற்கு சிரமப்படுகிறது என்றால் கால்நடை மருத்துவரை அணுகலாம். இந்த நிகழ்வின் போது பசுக்கள் களைப்படையாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கன்றுகள் இறப்பை தடுக்க முடியும்.

பிறந்த கன்றுகளை பராமரிக்கும் முறை !



கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் மேல் உள்ள அதாவது மூக்கு, வாய்ப்பகுதியிலுள்ள கோழையினை நீக்கிவிட வேண்டும். அதை தாய் மாடுகளே பார்த்துக்கொள்ளும். அந்த கோழைகளை தாய் மாடுகளே நக்கி உலர்த்திவிடும். அதனால் கன்றுகளின் சுவாசமும், இரத்த ஓட்டமும் சீராக்கப்படும்.ஒருவேளை தாய் மாடு கன்றுகளை நக்கவில்லை என்றால், அவற்றை உலர்த்த துணி அல்லது கோணிப்பையால் நன்றாக துடைத்து விட வேண்டும்.கன்றுக்குட்டி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்த பிறகு அவற்றின் தொப்புள் கொடியை துண்டித்து மருத்துவம் செய்ய வேண்டும். அதாவது தொப்புள் கொடியின் அடிப்பாகத்திலிருந்து 25 செ.மீ விட்டு, கிருமி நாசினியால் நனைக்கப்பட்ட ஒரு நூலில் முடிப்போட்டு 1 மீட்டர் நீளத்தை விட்டு துண்டிக்க வேண்டும். கொட்டகையிலுள்ள ஈரமான படுக்கைப் பொருட்களை நீக்கிவிட்டு, கொட்டகையை சுத்தமாகவும் ஈரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.கன்றுக்குட்டிகள் பிறந்தவுடன் மூச்சுத்திணறினால் அவற்றை ஓரிரு நிமிடம் தலைகீழாக பிடித்தால் சரியாகிவிடும். கன்று போட்ட 12 மணி நேரத்தில் சீம்பாலைக் குடிக்க வைக்க வேண்டும். மேலும் சீம்பாலை அதிகமாக குடிக்க விடக்கூடாது. இதனால் கன்றுகளுக்கு ஒவ்வாமை ஏற்படும். சீம்பாலுக்கு மாற்றாக முட்டை ஒன்று, தண்ணீர் 100 மில்லி, விளக்கெண்ணெய் அரை ஸ்பூன், பால் 500 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.கன்று ஈன்ற மாடுகளுக்கு 5 நாட்களில் சீம்பால் நின்று விடும். அதன்பிறகு தினமும் 3 லிட்டர் பால் கன்றுகளுக்கு தேவைப்படும். இதனை காலை, மாலை என பிரித்து வழங்கலாம். மேலும் கன்று பிறந்த 5 முதல் 10 நாட்களில் அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்