Ad Code

Ticker

6/recent/ticker-posts

பர்வதமலை சுற்றுலா

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.



சிறப்புகள்:

ருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். 



அம்மன் பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.



அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.



அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து
 கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம்.
அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.பர்வதகிரி என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் இந்த மலை

திருவண்ணாமலையிலிருந்து 37 கி.மீ. தூரத்திலும், போளூரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும் உள்ளது. செங்கம் செல்லும் சாலையில் தென்மாதி மங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் மலையை நோக்கிப் பயணித்தால் முதலில் வருவது பச்சையம்மன் கோவில். சப்த முனிகள் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி நம் கண்களையும் மனதையும் நிறைக்கின்றது. பச்சையம்மன் ஆலயத்தின் உள்ளே சென்றால் மிகுந்த தேஜஸோடு பச்சை நிறத்தில் பச்சையம்மன் காட்சி தருகிறார். வனச்சரக சோதனைச் சாவடியைத் தாண்டி உள்ளே நடந்தால் முதலில் வருவது பஞ்சமுக ஆஞ்சனேயர், ஒரு கையில் கதையும், இன்னொரு கையில் சஞ்சீவி மலையும் ஏந்திய வண்ணம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார்.நாம் வீரபத்திர சுவாமி ஆலயத்தை அடைகிறோம். பெரிய கண்களும் கையில் வாளுமாக வீரபத்திரர் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பின்பகுதியில் நடந்து சென்றால் அங்கே தென்படுகிறது ரேணுகா பரமேஸ்வரி ஆலயமும் ஆகாச கங்கையும். திவ்ய சொரூபிணியான ரேணுகா பரமேஸ்வரி சகல பிணிதீர்க்கும் தீர்த்தக் குளமான ஆகாச கங்கையின் குளக்கரையிலேயே அமர்ந்திருக்கின்றார். சிறிது தூரத்தில் வனதுர்க்கையையும் ஜகதீசரையும் காண முடிகிறது.தொடர்ந்து நடந்தால் மலையேறுவதற்கான முதல் படி வருகிறது. அங்கே கணநாதரையும் சிவலிங்கத்தையும் தரிசிக்கலாம்.



'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 'ஓம் நமசிவாய' என்ற கோஷங்கள் மலையில் எதிரொலித்தவாறு ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து மலையை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கின்றன.

படிகளில் நடக்கும்போது ஏற்படும் சிரமம் நாம் இறைவனை தரிசிக்கப் போகிறோம் என்ற நினைவு வந்ததும் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது. இங்கே விசேஷம் என்னவென்றால் நமது கைகளால் நாமே இறைவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்யலாம்.சிறிது தூரம் சென்றதும் சித்தர்கள் அமைத்து வழிபட்ட நாகலிங்க மணி மண்டபம் சிதிலமடைந்திருந்தாலும் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வெளிச்சம் இல்லாத நிலையிலும் அந்த மண்டபத்தின் உன்னதம் நமக்குத் தெரிகிறது. அங்கிருந்த பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள பாதை மிக வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.மிக மிக முக்கியமான இடம் வந்துவிட்டது. மிகவும் செங்குத்தான 700 அடி உயரமுள்ள மலையின் துவக்கம். மலையில் ஏற ஏதுவாகப் பழங்கால முறைப்படி மலையில் துளை இட்டு கடப்பாரையை அதில் நுழைத்து மூலிகை ரசம் கொண்டு இறுக்கமாக்கி எந்த நிலையிலும் வெளியே வந்துவிடாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முகப்பில் உள்ள வீரபத்திரர், காளி சிலைகளுக்குக் கற்பூரம் ஏற்றி வழிபட்டபின் கடப்பாரைகளாலான படியில் ஏறுகிறோம். அதன் பின்னர் ஏணிப் படியும், ஆகாயப் படியும் வருகின்றன. இரண்டு மலைகளை இணைக்கும் ஆகாயப்படி மிகவும் ஆபத்தானது.

மண்டபத்தில் நுழைந்து மேலே சென்றால் இடது பக்கம் சித்தர் குகையும் ஆசிரமமும் தென்படுகின்றன. வலதுபுறம் நாம் வெகுநேர ஆவலுடன் எதிர்பார்த்து நடந்து வந்த ஸ்ரீபிரம்மராம்பிகை சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி சன்னதி வந்துவிட்டது. அதைக் கடந்து சென்றால் திருக்குளம். மழை தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் இந்த மலையில் இல்லை.

கோவிலின் உள்ளே நுழைகிறோம். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோர் வரிசையாக அமைந்துள்ளனர். அவர்களை முறையாகப் பூஜித்துவிட்டு ஈசான்ய மூலையில் அமைந்துள்ள போகர் மற்றும் அகத்தியரை வணங்குகிறோம்.



அதன் பின் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியும் ஆகாயத்தில் இருந்துகொண்டு அடியவரை ரட்சிக்கின்ற அன்னையாம் பிரம்மராம்பிகையும்… ஆஹா! பார்க்கப் பார்க்க ஆனந்தம். அன்னைக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்த பின் இந்த அகிலத்தையே ஆட்டுவிக்கின்ற நாயகனாம் ஸ்ரீமல்லிகார்ஜுனரைப் பார்க்கின்றோம்.

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், ஓங்காரத்தின் முழுவடிவம், திவ்ய சொரூபிணியானான ஐயன் எம்பெருமான் நடு நாயகமாக நந்தியம் பெருமான் முன்னிலையில் அமைதியாக, பரப்பிரம்மமாக, மேலே ஜலதாரையுடன் வீற்றிருக்கின்றார்.கண்களில் நீர் மல்க, உடல் சிலிர்க்க இறைவனைக் குளிர்விக்க எடுத்துச் சென்ற அபிஷேகத் திரவியம் மற்றும் பூஜைப் பொருட்களை எல்லாம் கொண்டு பூஜிக்க ஆரம்பித்தோம்.



ஒவ்வொரு அபிஷேகத்தின் முடிவில் அலங்காரமும் ஆராதனையும் செய்யும்போது ஓம் நமசிவாய கோஷம் விண்ணைப் பிளந்து நமது எண்ணமெல்லாம் நிறைந்து சிவானுபவம் எங்கும் பரிபூர்ணமாய் விளங்கியது. சிவ நாமம், சிவ ஸ்தோத்திரம் மற்றும் பாடல்களுடன் பூஜையை நிறைவு செய்தோம்.மனமும் உடலும் லேசாக இறைவன் அனுபூதியை ரசித்து, உணர்ந்து மகிழ்ந்து ஆனந்தம் அடைந்து சிறிது நேரம் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்தோம். அப்போதும் தென்னாடுடைய சிவனே போற்றி! ஓம் நமசிவாய! என்கிற கோஷங்கள் நமது காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.



அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம் என்று கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும்.திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.



இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும்.அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.



பின் குறிப்பு:
லைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம்.

மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து வசதி:
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்