Ad Code

Ticker

6/recent/ticker-posts

நூர்ஜஹான் காதல் கதை

பாரசீக நாட்டின் மிகவும் புகழ் பெற்ற குடும்பம் அது. புகழ் பெற்றதாலேயே அதற்கு எதிரிகளும் இருந்தனர். அவர்கள், அந்த குடும்பத்தை ஒழித்துக்கட்ட தக்கதொரு வாய்ப்புக்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில் குடும்பத்தின் வயதான தலைவர் மரணம்யடைந்தார். அவ்வளவுதான் எதிரிகள் குடும்பத்தை சூறையாடினர். உயிர் பிழைத்தால் போதும் என்று குடும்பத்தலைவரின் மகன் மிர்ஜா கயாஸ் தனது நிறைமாத கர்ப்பிணியுடன் நாட்டை விட்டே தப்பி ஓடினான். 'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பது போல, கணவன்,மனைவி இருவரிடமும் எஞ்சியிருந்த பொருட்களையும் வழியில் திருடர்கள் கொள்ளையடித்து சென்றார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதையில் தட்டுத்தடுமாறி சென்றனர். இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் கண்டஹர்  நகரத்துக்கு அருகில் வந்தபோது நிறைமாத கர்ப்பிணி மனைவி பெண் மகவு ஒன்றினைப் பெற்றெடுத்தாள். நாடில்லை, வீடில்லை, கையிலோ பொருள்ளில்லை, மனதிலோ நம்பிக்கையில்லை. ' நாமே இந்த நிலையில் தத்தளிக்கும்போது, இந்த இளம் சிசுவையும் எப்படி பராமரிப்பது?' என்ற  கேள்வி  பெற்றோரின் நெஞ்சைப் பிளந்தது. தங்களுடன் அந்த பச்சிளம் குழந்தை இருந்து வாடி, வதங்கி வயிறு சுருங்கி உயிரை விடுவதைவிட 'கடவுள் கருணை இருந்தால் வேறு யாரிடமாவது வளரட்டும்'என்று  மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையைை ஈன்ற இடத்திலேயே விட்டு சென்றனர். சற்று  நேரம் கழித்து, அந்த வழியாக வந்த யாத்திரிகர்கள் குழு ஒன்று, படமெடுத்து நின்றிருந்த ராஜநாகம் ஒன்றைைக் கண்டது. அதன் படத்துக்கு கீழே ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்றியது.அருகில் சென்று பார்த்தார்கள். ராஜநாகம் ஒரு பச்சிளம் தளிரின் முகத்துக்கு மேலே குடைபோல் படமெடுத்து. சுட்டெரிக்கும் வெயில் அதை தாக்காதவாறு காப்பாற்றிக் கொண்டிருந்தது. அண்டி வந்த ஆட்களை கண்டு அரவம் விலகிச் சென்றது. அந்த குழந்தையை எடுத்துச் சென்றனர் குழுவினர். விரைவில் முன்னால் சென்றுகொண்டிருந்த அதன் பெற்றோரிடமே சேர்ப்பித்தினர் விதியை மாற்ற இயலாத அவர்களும் அந்த அபூர்வக் குழந்தையுடன் இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்தனர்.

ந்தியாவின் பேரரசர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். சிறந்த கல்வியறிவும். நல்ல நிர்வாகத் திறனும் கொண்டிருந்த மிர்சா கயாஸ் விரைவில் அக்பரின்  கவனத்துக்கு வந்தது, அவரது அன்புக்குப் பாத்திரமானான். அக்பரின் ஆட்சியில் முக்கிய அமைச்சனும் ஆனான். அவனது அதிசயக் குழந்தை பருவ மங்கை நூர்ஜஹான்வாக வளர்ந்தது. மற்ற பெண்களைப் போல கணவன் குழந்தையுடன் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை நடத்திவிட்டு போவதற்காக அவள் பிறக்கவில்லை போலும். அவள் படைப்பதற்காக ஒரு சரித்திரமே காத்துக் கொண்டிருந்த போது, அவ்வளவு எளிதாக விதி அவளை விட்டு விடுமா என்ன? பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், அக்பரின் அரசிகளில் ஒருத்தியான  ரக்கயா  சுல்தானா பேகத்தின் பணிப்பெண்ணாக அந்தப்புரத்தில் பணியில் அமர்ந்தார் நூர்ஜஹான். சலனம் எதுவும் இல்லாமல் ஓடிய அவள் வாழ்க்கையும் சத்தமில்லாமல் கடந்துு முடிந்திருக்கும். காதல் என்ற  பேருரணர்வு ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்! 1605 இல் அக்பர் காலமானார். அவரது மகன் சலீம் 'நூருதீன் ஜஹாங்கீர்'என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். 1611 ஆம் ஆண்டு கடுமையான குளிர்காலம் முடிந்ததும். இயற்கையுடன் இணைந்து வனப்புடன் காட்சியளிக்க வசனம் பிறந்தது. எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. மனித இதயங்கள் விரிந்து மலர்ந்தன. நௌரோஸ் எனப்படும் வசந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள். குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க அரண்மனையில் நடந்த கொண்டாட்டங்களில் மாமன்னன் ஜஹாங்கிர் கலந்துகொண்டு ஆடிப்பாடினான். வசந்தமும் வாழ்வும் ஊணும் உறக்கமும் உற்ற துணை ஒன்றின்றி ஒரு போதும் ருசிப்பதேதில்லை. தக்கதொரு துணையை நாடி ஜஹாங்கிர் தவித்துக் கொண்டிருந்த நேரம் அது! அப்போதுதான் அரண்மனையின் மீனா பஜாரில் அவரின் கண்களில் திடீரென்று தென்பட்டால் நூர்ஜகான் மின்னல் ஒன்று தன்னைத் தாக்கியது போல பல கணங்கள் செயலிழந்து நின்றான். அவன் அவள் மேல் வைத்த கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. பளீரென ஒளிர்ந்த அவளது அழகு அவனை திக்குமுக்காட செய்தது. அவனோ முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. அவனை மணந்துகொள்ள நாடுகள் பலவற்றின் அரசகுமாரி களிடையே பெரும் போட்டி. அவளோ அந்தப்புரத்தின் சாதாரண பணிப்பெண். இருப்பினும் திடீரென முளைத்த காதல் தீயில் ஜஹாங்கிர் எரியத் தொடங்கினான். அந்த காதல் தழல் நூர்ஜகானையும்  பற்றியது. அவளும் அந்த தீக்கு தன்னை ஆகுதியாக அளித்தாள்.ஜஹாங்கீர் அவளை தன் மனைவியாக்கிக் கொள்ள தீர்மானித்தான். நாடும் வீடும் இல்லாத  அகதி இவள் என்றனர் சிலர். சக்கரவர்த்தி அரண்மனை பணிப்பெண்ணை மணப்பதா? என்று எக்காளமிட்டனர் மற்றவர். எதுவும் அவர்கள் காதலை அசைக்கவில்லை.

நூர்ஜஹான், ஜஹாங்கீரை  மணந்து அவனது அன்புக்குரிய பட்டமகரிஷியானாள். அரண்மனையில் அடியெடுத்து வைத்த அந்த அழகு பெட்டத்துக்கு 'மாளிகையின் ஒளி' என்ற பொருளில்' நூர்மஹால்' என்று பெயரிட்டான் ஜஹாங்கீர். பின்னர் சற்று யோசித்தான். அரண்மனைக்கு மட்டுமல்ல 'உலகுக்கே இவள் ஒரு பேரொளி'  என்றபொருளில் 'நூர்ஜஹான்' என்ற பெயரில் தன் நாயகியை உலகறியச் செய்தான்.  ஆட்சி அதிகாரத்தில் நூர்ஜகானுக்குப் பங்களித்தான்.  அவளது உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டு தன் காதல் மனைவிக்கு, மாமன்னர்களுக்கே உரிய, அரியதொரு கௌரவமும் அளித்தான். ஆனால் தன் காதல் வென்றதையும் உலகப் பேரழகி தன் நாயகியாக வந்து தன் இதயத்திலேயே அமர்ந்ததையும் கொண்டாடுவோ என்னவோ, விரைவிலேயே மதுவின் ஆதிக்கத்திலும், நூர்ஜஹானின்  நெருக்கத்திலும் மூழ்கியே போனான் ஜஹாங்கீர். நூர்ஜஹானும் காதல் வயப்பட்டு இருந்தால்தான்! ஆனாலும் அவள் தன் இதயத்தை அப்படியே தன் கணவனுடனான காதலில் கரைத்து விடவில்லை. மாமன்னர்கள் பாபரால் தோற்றுவிக்கப்பட்டு, அக்பரால் வளர்க்கப்பட்டது முகலாய சாம்ராஜ்ஜியம். அந்த மகோன்னதமான சாம்ராஜ்ஜியம் தனது காதல் கணவனால் சிதறுண்டது என்ற அவப்பெயர் ஏற்படாது காக்கும் கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தாள் அவள். ஆகவே ஆட்சி பொறுப்பை தன் கையில் ஏந்தினாள்.

கி.பி 1612 ஆம் ஆண்டு முதல் 1627ஆம் ஆண்டு வரை பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்யத்தை உண்மையாக ஆண்டவள் பேரழகி நூர்ஜஹான்தான்! ஜஹாங்கீர் மனைவி ஆட்சி செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்ததோடு சரி! தொழில், வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி, பெண்கள் நலன் போன்ற பல துறைகளிலும் முத்திரை படித்தாள். அவளது ஆட்சியில் தலைநகரமான ஆக்ரா பெரும் வர்த்தக நகரமாக உருவானது. ஒருபுறம் ஜஹாங்கீருடன் கொண்ட காதல் அவளைத் தகித்துக் கொண்டிருந்தது. அந்த காதலால் உந்தப்பட்ட அவள் கவிதைகளை இயற்றினாள். ஓவியங்கள் தீட்டினாள். அழகிய கட்டடங்களையும் தோட்டங்களையும் உருவாக்க உந்துகோலாக இருந்தாள். ஆடைகளையும் ஆபரணங்களையும் விதவிதமாக வடிவமைத்தாள். அரசியல் அரசியான நூர்ஜகான் என்பவளால் மட்டுமல்லாமல் கலையரசி நூர்ஜஹானாலும் முகலாய ஆட்சி பெயர் பெற்று விளங்க தொடங்கியது. நூர்ஜஹான், ஜஹாங்கீர் மீது கொண்டிருந்தது வெரும் காதலும் விசுவாசமும் மட்டுமல்ல. தனது உயிர் வேறு ஜஹாங்கீர் உயிர் வேறு என இரண்டாக எண்ணாமல், தனது உயிருடன் தனது காதல் கணவனின் உயிரையும் இரண்டறக் கலந்துவிட்டு இருந்தால் அவள். ஒருமுறை தளபதி மஹபுத்கானால் ஜஹாங்கீர் திடீரென சிறைப்படுத்தப்பட்டபோது, யானை மேல் சென்று, பெரும் வெள்ளம் போய்க்கொண்டிருந்த நதியை கடந்து, வீரத்துடன் போரிட்டு கணவனை காப்பாற்றிய காதலி அவள். மற்றொரு முறை ஜஹாங்கீருடன் அவள் யானை மீது ஆரோகணித்து சென்று கொண்டிருந்த போது திடீரென நான்கு புலிகள் அவர்களை சூழ்ந்தன. சிறு சத்தம் செய்தாலும் அவை மேலே பாய்ந்துவிடும் என்ற நிலை! அந்த இடுக்கண் பொழுதில், நான் இவைகளை சுட வேண்டுமா அல்லது அம்பு எய்து கொல்ல வேண்டும் சொல்லுங்கள் என  கணவனை கேட்டாள்.இரண்டு சூடு, மற்ற இரண்டை அம்பு எய்து கொள் என்று சைகையிலேயே மறுமொழி அளித்தான் மன்னன் ஜஹாங்கீர்.  அடுத்த கணம் அவளது துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த  இரு குண்டுகள் இரு புள்ளிகளை வீழ்த்தின. உடன் உலா வந்து கொண்டிருந்த உறவுகள்   இரண்டு  இறந்து  வீழ்ந்ததும் மற்ற புலிகள் இரண்டும் ஆவேசத்துடன் அவள்மீது பாய்ந்தன. ஒரு கணம் தாமதித்து இருந்தாலும் நூர்ஜஹான் அந்த புலிகளுக்கு தன் காதல் கணவனுடன் சேர்ந்து இறையாகி இருந்திருப்பாள். ஆனால் நடந்ததோ வேறு. காற்றென அவள் எய்த அம்புகளால் மற்ற இரண்டு புலிகளும் மாய்ந்து வீழ்ந்தன.  காலம் பறந்தது காதல் தொடர்ந்தது. 1627 இல் அவளது காதல் கணவனைக் காலம் கொண்டது. மனமுடைந்து போனாள் நூர்ஜஹான். ஆட்சி மாறி, ஷாஜகான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டதும். பொது வாழ்விலிருந்து ஒதுங்கி தனி வாழ்க்கை வாழத் தொடங்கினாள்.   தற்போதைய பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் லாகூர் நகரத்தில் தன் கணவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அழகிய சமாதியும் பூந்தோட்டமும் அமைப்பதில் நேரத்தை செலவிட்டாள். தன் முடிவும் நெருங்குவதை உணர்ந்து கணவரின் கல்லறைக்கு அருகிலேயே தனக்காக ஒரு சிறிய கல்லறையும் அமைத்துக் கொண்டால். சரித்திரத்தில் அழியாத  இடம் பெற்ற நூர்ஜஹான் கிபி  1645-ல் இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றாள். காதலின் சின்னமாக வாழ்ந்து மறைந்த அவரது சமாதியில் அவளுடைய அழியாத கவிதை வரிகளே பொறிக்கப்பட்டு காதலுக்கு சாட்சியாக இன்றும் விளங்குகின்றன.

கருத்துரையிடுக

1 கருத்துகள்