Ad Code

Ticker

6/recent/ticker-posts

நாகதத்த காப்பியன்

நாகதத்தன் காப்பியன், மருத்துவக் கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர். விஷ்ணு குப்த சாணக்கியன், ஜோதிட சாஸ்திரத்தையும், குடில நீதியையும் கற்றுத் தேர்ந்தவர். அக்காலத்தில், பல முறை பாரசீகர்களின் தாக்குதலுக்கு உள்ளான தட்ச சீலத்தின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ற முறையில் வழி கண்டுபிடிக்க இருவரும் முயன்றார்கள்.பல்வேறு கலந்துரையாடலுக்குப் பின் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். நாகதத்த காப்பியன் பாரசீகத்தில் எதிரியின் பலம் எத்தன்மையுடையதாய் இருக்கிறது என்பதை நேரில் கண்டறியவும் பாரசீகர்களின் தாக்குதல்களை கிரேக்கர்கள் எப்படி சமாளித்து திரும்பியோட செய்தனர் என்பதையும் கண்டறிய, பாரசீகத்திற்கும் கிரேக்கத்திற்கும் நேரில் செல்லப் போவதாகவும் கூறினார் அதன்படி சென்றார்.

பாரசீக மன்னன் தாராயோஷ்
பெர்ஷபோலியைத் தலைநகராக கொண்டிருந்தான். பாரசீகத்தின் படைபலம் எப்படிப்பட்டது என்பதையறிய பாரசீகத்திற்கே பயணம் மேற்கொண்டார் நாகதத்தன். அந்தப் பயணத்திற்கு வைத்தியத் தொழிலே அவருக்கு உதவியாக இருந்தது. போகும் வழியில் ஆங்காங்கே தங்கி நோயுற்ற மக்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்று மீண்டும் பயணமாவார்.ஒரு நாள், அவர் பாரசீகத்துக்கருகே ஒரு பயணிகள் விடுதியில் தங்கியிருந்தார். அங்குள்ள நோயுற்ற மக்களுக்கு வைத்தியம் செய்து நன்மதிப்பை பெற்றிருந்தார். சற்று தூரத்தில் சுற்றுலா செல்லும் அரசர்களோ, செல்வந்தர்களோ, தங்கும் விடுதி ஒன்று இருந்தது. அந்த விடுதியில் பாரசீக சக்கரவர்த்தியான தாரயோஷின் தங்கையும், தங்கையின் கணவரான சிற்றரசரும் அவர்களுடைய புதல்வியும் தங்கியிருந்தனர்.

தாரயோஷின் தங்கைக்கு உடல் நலம் குன்றி, மிக மோசமான நிலையில் இருந்தாள். பாரசீக வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. அந்நிலையில் நாகதத்தன் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. வீரர்கள் நாகதத்தனை அழைத்துக் கொண்டு சென்றனர். நாகதத்தன் அந்த மகாராணியை சிறந்த முறையில் வைத்தியம் செய்து குணப்படுத்தி விட்டார். அவரது சிகிச்சை முறையில் மகிழ்ச்சியுற்ற மன்னன், தன் அரச குடும்ப வைத்திராகவே அவரை ஆக்கிக்கொண்டார். நாகதத்தனுக்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. அவர்களுடன் பெர்ஷபோலி நகரத்திற்குச் சென்றார்.நாகதத்தனின் மருத்துவ முறைக்கு பாராட்டு கிடைத்தது. அதற்குப் பரிசாக பணிப்பெண்ணான, கிரேக்க நாட்டைச் சேர்ந்த வணிகச் குடும்பத்து பெண் ஒருத்தி பாரசீக வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததவளை கேட்டுப் பெற்றார். மணமுடித்துக் கொண்டார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவளை அடிமைத்தளையிலிருந்து மீட்டார்.

பின்பு அவளது தாய் நாடான கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகருக்கு சென்று. அங்கேயே பல காலம் வாழ்ந்தார். அப்போதுதான் உலகற்சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலை அவர் சந்தித்தார். அரிஸ்டாட்டில் தன் மாணவரான அலெக்சாண்டரையும் அறிமுகப்படுத்தினார். பாரத நாட்டின் நிலைகுறித்து விவாதம் நடந்தது. பாரசீகர்களின் தாக்குதல் பற்றியும் அப்போது கூறியிருக்கிறார் நாகதத்தன். அலெக்சாண்டரின் தந்தை பிலிப் இறந்தபிறகு அலெக்சாண்டர், சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றார். அவர், சக்தி வாய்ந்த சேனையைத் திரட்டி பாரசீகர்களின் வசமிருந்த பல பிரதேசங்களை வென்று பெயர் பெற்றார்.நாகதத்தன், தன் மனைவியுடன் ஒரு நாள் படகில் கடல் பயணம் மேற்கொள்ளும் போது புயல் காற்றால் தாக்கப்பட்டு இருவரும் மூழ்கிப் போனார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்