Ad Code

Ticker

6/recent/ticker-posts

கருவில் இருக்கும் குழந்தையின் ஊனமுறும் தன்மைக்கு யார் காரணம்?


செல்வ செழிப்புமிக்க பாரத நாட்டில்தான் முதன்முதலில் 'மருத்துவக்கலைக் களஞ்சியம்' என்ற நூல் கிமு 8-10 நூற்றாண்டுகளிலேயே உருவானது. இந்த மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை உருவாக்கிய மாமேதைகள் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைத்திடவில்லை. ஆனால் சில குறிப்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

இந்நூலை அத்ரேயர் என்னும் அறிஞரின் மேற்பார்வையில், அக்னிவேசன் என்கிற மருத்துவ நிபுணர் உருவாக்கினார் என்றும், இந்நூல் சரகர் என்னும் அறிஞரால் முற்றிலுமாக படிக்கப்பட்டு, ஆராய்ந்து அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிறகே புகழ்பெற்று விளங்கியது என்றும், பின்னாளில் அதுவே 'சரக சம்ஹிதை' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் வரலாறு கூறுகிறது.

இந்த 'சரக சம்ஹிதை' என்னும் மருத்துவக்கலைக் களஞ்சியம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
'சரக சம்ஹிதை'யில் மனித உடலின் அமைப்பு பற்றியும் உடல் உறுப்புகள் பற்றியும் விரிவாக
விவரிக்கப்பட்டுள்ளது. பாராம்பரிய பண்புகள் குறித்தும் 'சரகசம்ஹிதை'யில் சில நிர்ணயங்களை உருவாக்கி இருக்கிறார் சரகர்.
ஒரு குழந்தை கருவறைக்குள் ஆண் அல்லது பெண்ணாக வடிவம் பெறுவது குறித்தும், இந்நூலில் வரையறைகள் செய்யப்பட்டுள்ளன. கருவில் இருக்கும் குழந்தையின் ஊனமுறும் தன்மைக்கு அதன் பெற்றோர் காரணமல்ல வெடிபொருட்கள், குறிப்பிட்ட தந்தையின் உயிரணுக்களோ அல்லது தாயின் சினைமுட்டையோதான் காரணம் என்றும் 'சரக சம்ஹிதை'யில் கூறப்பட்டுள்ளது. இன்றைய ஜுன் ஆராய்ச்சிக்கு 'சரக சம்கிதை' முன்னோடியாக திகழ்கிறது என்றால் மிகையில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்