Ad Code

Ticker

6/recent/ticker-posts

நுண்ணுயிர் உரம்

நுண்ணுயிர் உரமிடுதல் நுண்ணுயிர் உரங்கள் மண்ணின் உயிரியல் கூறுபாட்டை மேம்படுத்த உதவுகிறது நுண்ணுயிர் உரங்கள் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சிக்கு பல சத்துக்களையும்,பயிர் ஊக்கிகளையும்,வறட்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.
நுண்ணுயிர் உரங்கள் பயன்பாடு: ஆலையிலிருந்து கொடுக்கப்படும் அசோகுரோ என்ற திரவ நிலை நுண்ணுயிர் உரம் காற்றில் உள்ள தழை சத்தை உள்ள பயிருக்கு தருகிறது பாஸ்சால் என்ற திரவ நிலை நுண்ணுயிர் உரம் கரையாத நிலையில் மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கிறது. பொட்டாவிட் என்ற திரவ நிலை நுண்ணுயிர் உரம் கரையாத நிலையில் மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கிரகித்து பயிருக்கு வழங்குகிறது
திடநிலையில் பூஞ்சான நுண்ணுயிர் உரமான நியூட்ரிவேம் மண்ணில் பரவி மணிச்சத்தை திரட்டி பெயருக்கு கொடுக்கிறது.இது கரும்பு பயிருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது
நுண் உயிர் உரங்கள் இடும் முறை வாய்க்கால் மூலம் நீர் பாசனம் செய்யும் வயல்களில் அசோகுரோ ,பாஸ்சால் மற்றும் பொட்டாவிட் நுண்ணுயிர் உரங்கள் ஒவ்வொன்றையும் ஏக்கருக்கு 1 லிட்டர் வீதமும் மற்றும் நியூட்ரிவேம் நுண்ணுயிர் உரத்தை ஏக்கருக்கு 500 கிலோ தொழு உரத்துடன் ஒன்றாக கலந்து பயிருக்கு இடவேண்டும் சொட்டு நீர் அமைத்த வயல்களில் மேற்குறிப்பிட்ட மூன்று திரவ நிலை உரங்களை மட்டும் சொட்டு நீர் வழியாக செலுத்தவும்.வேம் நுண்ணுயிர் உரத்தை தொழு எருவுடன் கலந்து மண்ணில் தனியாக இடவும்.
 குறிப்பு:
நுண்ணுயிர் உரங்களை இரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது. நுண்ணுயிர் உரம் இட்ட பிறகு 15 நாட்கள் இடைவெளி விட்டு இரசாயன உரங்களை இட வேண்டும். சொட்டு நீர் பாசனத்தில் 7 நாட்கள் இடைவெளி போதுமானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்